வாசகர்கள் கருத்துகள் ( 1 )
குட்டிச்சாத்தானை ஏவுங்க, கடிச்சு குதரட்டும்.
இளையான்குடி: இளையான்குடி பாரதியார் தெருவில் குப்பை கொட்டக்கூடாது என எச்சரிக்கை அறிவிப்பு செய்ததோடு அதையும் மீறி கொட்டினால் செய்வினை செய்யப்படும் என அறிவித்து அதிர்ச்சியளித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட பாரதியார் தெருவில், குப்பை கொட்டுவதைத் தடுக்க அப்பகுதியைச் சேர்ந்த சிலர் வித்தியாசமான முறையில் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வைத்துள்ளனர். அந்த அறிவிப்பில், இங்கு குப்பை கொட்டக்கூடாது, மீறினால் செய்வினை செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டு, மண்டை ஓடு படமும் இடம்பெற்றுள்ளது. இருப்பினும் சிலர் பொருட்படுத்தாமல் அறிவிப்பு பலகையின் கீழ் வீட்டு குப்பை, பிளாஸ்டிக் கழிவுமற்றும் உணவுக் கழிவுகளை தொடர்ந்து கொட்டி வருகின்றனர்.
குட்டிச்சாத்தானை ஏவுங்க, கடிச்சு குதரட்டும்.