உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / கர்நாடகா அணிக்காக சாதிக்க காத்திருக்கும் அதிதி பக்கா

கர்நாடகா அணிக்காக சாதிக்க காத்திருக்கும் அதிதி பக்கா

ஒரு காலத்தில் ஆண்களுக்கான விளையாட்டாக மட்டுமே இருந்த கிரிக்கெட்டில், இப்போது பெண்களும் சாதித்து வருகின்றனர். ஆண் விளையாட்டு வீரர்களுக்கு நிகராக சிக்சர் அடிப்பது, எல்லைகோடு அருகே பந்தை பாய்ந்து பிடித்து, 'கேட்ச்' செய்வது என்று கெத்து காட்டுகின்றனர்.

எல்லை மாவட்டம்

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியில் வேதா கிருஷ்ணமூர்த்தி, ராஜேஸ்வரி கெய்க்வாட், ஸ்ரேயங்கா பாட்டீல் உட்பட, சில கர்நாடக வீராங்கனைகள் அங்கம் வகிக்கின்றனர். மாநிலத்தில் உள்ள நிறைய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு, இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்ற ஆசையும் உள்ளது. இவர்களில் ஒருவரான 18 வயதே ஆன இளம் வீராங்கனை பற்றி பார்க்கலாம்.கர்நாடகா - தெலுங்கானா மாநில எல்லையில் அமைந்து உள்ள பீதரின் பால்கியை சேர்ந்தவர் அதிதி பக்கா, 18. இவரது தந்தை வீரஷெட்டி. தாய் அனிதா. வீரஷெட்டி தீவிர கிரிக்கெட் ரசிகர். கிரிக்கெட் போட்டிகளை வீட்டில் அமந்து 'டிவி'யில் பார்த்து கொண்டே இருப்பார். தந்தையுடன் சேர்ந்து மகளும் கிரிக்கெட் பார்த்து வருவார். 4 வயது இருக்கும்போதே, அதிதிக்கு கிரிக்கெட் மீது ஆர்வம் வந்தது.அந்த நேரத்தில் அதிதி குடும்பம், பீதரில் இருந்து பெங்களூருக்கு குடிபெயர்ந்தனர். இங்கு தனியார் பள்ளியில் சேர்க்கப்பட்ட அதிதி, அந்த பள்ளியில் கிரிக்கெட் பயிற்சியும் எடுத்தார்.8 வயதில் பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி விளையாட துவங்கினார். பேட்டிங், பந்துவீச்சில் ஜொலித்தார். இதையடுத்து கடந்த 2022 ம் ஆண்டில், அவருக்கு 16 வயது இருக்கும் போது 19 வயதுக்கு உட்பட்டோருக்கான, கர்நாடக அணியில் தேர்வு செய்யப்பட்டார்.

இந்திய அணி

வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டம் என்று கூறப்படும், பீதரில் இருந்து 16 வயதே ஆன சிறுமி ஒருவர், கர்நாடகா அணிக்கு தேர்வானதை பீதர் மக்கள் கொண்டாடினர்.இந்நிலையில் நாளை முதல் 12ம் தேதி வரை, பி.சி.சி.ஐ., சார்பில் குஜராத் மாநிலம் சூரத்தில் 19 வயதுக்கு உட்பட்ட, பெண்களுக்கான கிரிக்கெட் தொடர் நடக்க உள்ளது. இந்த தொடரில் கர்நாடகா அணியில், அதிதி பக்கா மீண்டும் இடம்பிடித்து உள்ளார். அணிக்காக சாதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்புடன் உள்ளார்.''இந்த தொடரில் நன்றாக விளையாடுவேன் என்று நம்பிக்கை உள்ளது. ''கூடிய விரைவில் இந்திய அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது,'' என, அதிதி பக்கா கூறியுள்ளார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி