உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / 1 ரூபாயில் கோட்டையா கட்டப்போற? கேட்ட கடைக்காரருக்கு ரூ.5,000 போச்சு

1 ரூபாயில் கோட்டையா கட்டப்போற? கேட்ட கடைக்காரருக்கு ரூ.5,000 போச்சு

கோவை : மீன் விலையை விட,ஒரு ரூபாய் கூடுதலாக பெற்றதால், இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.கோவை, கவுண்டம்பாளையம், ஹவுசிங் யூனிட்டில் வசிப்பவர் ராஜா. சிறை காவலரான இவர், மேட்டுப்பாளையம் சாலையிலுள்ள, 'பிஷ் புட்டீ' என்றகடையில், 2024 ஆக., 28ல் மீன் வாங்க சென்றார். ஒரு கிலோ மீன்,299 ரூபாய் என்று கடைக்காரர் கூறியுள்ளார். கூகுள் பே மூலம் பணம் செலுத்திய போது, கடை விற்பனையாளர், 300 ரூபாய் என்று உள்ளீடு செய்தார்.இதனால் ராஜாவின் வங்கி கணக்கில், 'கியூஆர் கோடு' மூலமாக, 300 ரூபாய் எடுக்கப்பட்டது. 'எதற்காக 1 ரூபாய் கூடுதலாக எடுத்துள்ளீர்கள்?' என, ராஜா கேட்டதற்கு, '1 ரூபாயில் கோட்டையா கட்டப்போற' என, கடைக்காரர் நக்கல் அடித்துள்ளார்.கடை உரிமையாளர்பேசியது, மன உளைச்சலை ஏற்படுத்தியதால், அவர் மீது, நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இழப்பீடு கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், ராஜா வழக்கு தாக்கல் செய்தார்.விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், 'மனுதாரரிடம் கூடுதலாக பெற்ற 1 ரூபாயை, எதிர்மனுதாரர் திருப்பி கொடுப்பதோடு,மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 2,000 ரூபாய், வழக்கு செலவு, 3,000 ரூபாய் வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

c.mohanraj raj
ஜூலை 10, 2025 18:43

ஆனால் டாஸ்மாக்கை கண்டால் மட்டும் மௌனமாக இருப்பது ஏன்


Vinayagam
ஜூலை 10, 2025 14:34

அசதியை பார்க்காமல், நுகர்வோர் மன்றத்தை அணுகினால் வெற்றி நிச்சயம்.


நிக்கோல்தாம்சன்
ஜூலை 09, 2025 20:56

அருமை அருமை , அப்போ தமிழக அரசு பேருந்து கண்டக்டர்கள் எவ்ளோ பேரு இப்படி ???


அப்பாவி
ஜூலை 09, 2025 09:46

பஸ் கண்டக்டரிலிருந்து ஒரு ரூவா சில்கறை இல்லைன்னு அடிக்கிறாங்க.


அப்பாவி
ஜூலை 09, 2025 09:45

பொதுத்த்றை நிறுவனங்கள் மூலம் நமக்கு ஏற்படும் மன் உளைச்சலுக்கு கோடி கோடியா இழப்பீடு தரணும்.


Kalyanaraman
ஜூலை 09, 2025 08:38

சபாஷ் நல்ல தீர்ப்பு. ஒரு ரூபாய் அதிகமாக விற்றதற்கு ₹5000 தண்டனை. டாஸ்மாக்கில் ஒரு ஒவ்வொரு பாட்டிலுக்கும் பத்து ரூபாய் கூட வச்சு விக்கிறாங்க. இதை விசாரணை செய்த "ஈடி"க்கு நீதிமன்றம் தடை விதிக்கிறது. என்ன முரண்பாடு¿?


சமீபத்திய செய்தி