உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / அரண்மனை மைதானத்தில் அயோத்தி ராமர் கோவில்

அரண்மனை மைதானத்தில் அயோத்தி ராமர் கோவில்

பெங்களூரு: ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ், புத்தாண்டை ஒட்டி பெங்களூரில் கேக் கண்காட்சி நடப்பது வழக்கம். இதுவரை 49 ஆண்டுகள் நடந்து இருக்கும் நிலையில், கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்காக 50வது கேக் கண்காட்சி நடக்க உள்ளது. அரண்மனை மைதானத்தின் திரிபுரா வாசனியில் இன்று துவங்கும் கண்காட்சி, ஜன., 1ம் தேதி வரை நடக்கிறது. தினமும் காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை கண்காட்சி நடக்கிறது.இந்த கண்காட்சியில் 21 வகையான கேக்குகள், பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளன. இதில் பார்வையாளர்களை வெகுவாக கவரும் வகையில், அயோத்தி ராமர் கோவில் கேக்கால் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த கேக்கின் எடை 850 கிலோ ஆகும். இந்த கேக் சாந்தனு, மகேஷ், மோகித், இந்திரஜித், கவுதம், ராகுல், சுன்னு, கணேஷ் ஆகியோரின் 45 நாட்கள் முயற்சியின் பயனாக உருவாகி உள்ளது.இந்த கேக்கை பாண்டண்ட் மற்றும் கம்பேஸ்ட் பயன்படுத்தி துல்லியமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. சிங்கங்கள், யானைகள், கருடன், ஹனுமன் ஆகிய சிற்பங்களும், கட்டட கலையின் பராம்பரியத்தை எடுத்து காட்டும் வகையில் உள்ளது. கண்காட்சியில் மற்ற கேக்குகளை விட, அயோத்தி ராமர் கேக் தான் அனைவரையும் கவரும் வண்ணம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

வைகுண்டேஸ்வரன்
டிச 13, 2024 12:14

20, 30 அடி க்கு புள்ளையார் சிலை செய்து, மூன்றாம் நாளே, கடலில் போட்டு ஏறி மிதிக்கற கூட்டம் தானே அது"


S.kausalya
டிச 13, 2024 06:19

கேக் வெட்டி கொண்டாட ராமர் தான் கிடைத்தாரா? கிறித்துவ நிகழ்ச்சியில் ஹிந்து கடவுள் உருவம் எதற்க்கு? புரியவில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை