உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / ரேஷன் கார்டில் பீர் பாட்டில்: குடும்ப தலைவருக்கு ஷாக்

ரேஷன் கார்டில் பீர் பாட்டில்: குடும்ப தலைவருக்கு ஷாக்

பேரையூர்: இ - ரேஷன் கார்டில், குடும்ப தலைவர் போட்டோவுக்கு பதில் பீர் பாட்டில் படம் இருந்ததால், அதிர்ச்சி ஏற்பட்டது. மதுரை மாவட்டம், சின்னபூலாம்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல், 46. இவரது மனைவி ஜெயப்பிரியா. ரேஷன் கார்டில் இவரது மனைவி, குடும்பத்தலைவராகவும், தங்கவேல், மகன், மகள் உறுப்பினர்களாகவும் இருந்தனர். இவரது மகளுக்கு திருமணம் நடந்தது. மகளின் பெயரை ரேஷன் கார்டில் இருந்து இ - சேவை மையம் மூலம் நீக்கம் செய்தார். அதன் பின், இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட இ - ரேஷன் கார்டை பார்த்தபோது, குடும்ப தலைவரான ஜெயப்பிரியா போட்டோவிற்கு பதில், பீர்பாட்டில் படம் இடம் பெற்றிருந்தது. இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

தங்கவேல் கூறியதாவது:

கடந்த வாரம் அமைப்பு சாரா கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்வதற்காக என் மனைவி சென்றார். அப்போது, பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிகமான இ - ரேஷன் கார்டில், என் மனைவி போட்டோவுக்கு பதில், பீர் பாட்டில் படம் இடம் பெற்றிருந்தது. நாங்கள் இன்னும், 'அப்டேட்' செய்யப்பட்ட நிரந்தர ஸ்மார்ட் கார்டை வாங்கவில்லை. ஆனால், -இ - ரேஷன் கார்டில் இப்படி மதுபாட்டில் படம் இருப்பதால், அதை பார்த்து நலவாரியத்தில் பதிவு செய்ய முடியாது எனக்கூறி திருப்பி அனுப்பி விட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

lana
ஆக 28, 2025 10:45

இன்னும் சில வருடங்களில் இது தமிழக அரசு official logo ஆகவும் வாய்ப்பு உள்ளது


தமிழன்
ஆக 26, 2025 13:09

லஞ்சம் கொடுத்து இருக்க மாட்டாங்க அது தான் அப்ளை பண்ணிய பக்கத்தை பார்க்காமலே அனுப்பி விட்டார்கள் போல நல்லாட்சில் நல்ல அரசாங்க அதிகாரி


அப்பாவி
ஆக 26, 2025 08:41

நல்ல குடிமகனோ?


முக்கிய வீடியோ