பெண் மூளைச்சாவு: நான்கு பேருக்கு வாழ்வு
மதுரை: மதுரை சத்திரப்பட்டியைச் சேர்ந்த ஆனந்தன் மனைவி கவிதா, 51. இவர் மார்ச் 16ம் தேதி டூவீலரில் செல்லும் போது மற்றொரு வாகனம் மோதியதில் அடிபட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மார்ச் 19 காலை மூளைச்சாவு நிலையை அடைந்தார். கவிதாவின் உறுப்புகளை தானமாக தர ஆனந்தன் முன்வந்தார். அவரது கல்லீரல் எடுக்கப்பட்டு புதுக்கோட்டை முத்து மீனாட்சி மருத்துவமனைக்கும் ஒரு சிறுநீரகம் திருச்சி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டன. மற்றொரு சிறுநீரகம், கருவிழிகள் மதுரை அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன. டீன் அருள் சுந்தரேஷ் குமார், ஆர்.எம்.ஓ., சரவணன், மருத்துவ பணியாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.