உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / பாடை கட்டி தாயின் உடலை மயானத்திற்கு துாக்கிச் சென்ற மகள்கள்

பாடை கட்டி தாயின் உடலை மயானத்திற்கு துாக்கிச் சென்ற மகள்கள்

அன்னுார்: அன்னுார் அருகே இறந்த 80 வயது தாயின் உடலை மகள்களே பாடையில் எடுத்து மயானம் வரை கொண்டு சென்றனர். காரேகவுண்டம் பாளையம் ஊராட்சி, நல்லிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் வெங்கிட்டான். இவரது மனைவி நஞ்சம்மாள், 80. இவர் வயது மூப்பின் காரணமாக நேற்று அதிகாலையில் இறந்தார். நஞ்சம்மாளுக்கு மூன்று மகள்கள் இரண்டு மகன்கள் உள்ளனர். பாசமாய் வளர்த்த தாய் இறந்ததையடுத்து மகள்கள் தாங்களே மயானத்திற்கு தாயாரின் உடலை எடுத்துச் செல்வதாக உறவினர்களிடம் கூறினர். உறவினர்களும் ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து மகள்கள், மருமகள்கள் மற்றும் உறவினர்கள் என எட்டு பெண்கள் மூங்கில் பாடை கட்டி நஞ்சம்மாளின் உடலை பாடையில் வைத்து சடங்கு செய்தனர். பின்னர் 300 மீட்டர் தொலைவில் உள்ள மயானத்திற்கு தோளில் சுமந்து சென்றனர். மயானத்தில் நஞ்சம்மாளின் உடல் புதைக்கப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்பட்டது. இறுதி சடங்கு முடியும் வரை இறந்தவரின் உடலை எடுத்துச் சென்ற பெண்களும் சடங்கில் பங்கேற்றனர். வழக்கமாக ஆண்கள் மட்டுமே இறந்தவரின் உடலை மயானத்திற்கு எடுத்துச் செல்வார்கள். வித்தியாசமாக பெண்கள் மட்டும் இறந்தவரின் உடலை எடுத்துச் சென்றது அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

suresh Sridharan
செப் 25, 2025 09:38

பெண்கள் இது செய்ததனால் யாருக்கு என்ன நஷ்டம் அவர்களுக்கு எல்லா விதத்திலும் உரிமை உள்ளது


பிரேம்ஜி
செப் 24, 2025 17:34

இதெல்லாம் ஒரு ஏமாற்றும் வேலை. உயிரோடு இருக்கும் போது சோறு போடாமல் செத்த பிறகு சீன் போடுவது! இனிமேல் ஆண்கள் பெண்களுக்கு பதில் பிள்ளை பெறலாம்! புதுமையாக இருக்கும்! காலம் மாறுது! நாமும் மாற வேண்டும்!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை