உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / பெண் டாக்டருக்கு வரதட்சணை கொடுமை; பிரபல யூடியூபர், குடும்பத்தினர் மீது வழக்கு

பெண் டாக்டருக்கு வரதட்சணை கொடுமை; பிரபல யூடியூபர், குடும்பத்தினர் மீது வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தேனி: தேனி வீரபாண்டியை சேர்ந்த பெண் டாக்டர் விமலாதேவியிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு மிரட்டிய மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த கணவரான யுடியூபர் சுதர்சன், அவரது பெற்றோர் சுந்தரராஜன், மாலதி, சகோதரி சக்திபிரியா, இவரின்கணவர் விக்னேஷ்வரன் மீது மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.தேனி மாவட்டம்வீரபாண்டி முல்லைநகர் விமலாதேவி 28. சிலஆண்டுகளுக்கு முன் மதுரையில் டாக்டராக பணிபுரிந்தார். அப்போது சுதர்சனை காதலித்து பெற்றோர் சம்மத்துடன் திருமணம் செய்தார். வரதட்சணையாகரூ. 5 லட்சம், 30 பவுன், ரூ. 2 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை வழங்கினர். சுதர்சன் யுடியூப் சேனலில் பணிபுரிந்தார். பின் தனியாக சேனல் நடத்தினார். அப்போது சொந்த வீடு கட்டினார்.அதற்கு விமலாதேவியின் 30 பவுன் நகையை வாங்கினார். பின் புது வீட்டிற்கு குடி புகுந்தனர். வீட்டுக்கடனை அடைக்க முடியவில்லை. சீர்வரிசை பொருட்கள் போதாது என சுதர்சன், பெற்றோர் சுந்தரராஜன், மாலதி, சகோதரி சக்திபிரியா கூறினர். மேலும் 20 பவுன் நகை கொண்டு வந்தால் தான் சேர்ந்து வாழ முடியும் எனக்கூறினர்.இந்நிலையில் கர்ப்பமாக இருந்த விமலாதேவியை, அவரது பெற்றோர் தேனிக்கு அழைத்து வந்தனர். விமலாதேவி பெற்றோர் சுதர்சன் தரப்பினரிடம் பேசி ரூ. 5 லட்சம் வழங்கினர். பின் 2025 ஏப்., 30ல் வீரபாண்டி கோயில் அருகில் நடந்த பேச்சுவார்த்தையில் சுதர்சன் , அவரது குடும்பத்தினர் மேலும் 20 பவுன் கொண்டு வர வேண்டும் எனக் கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக எஸ்.பி., சிவபிரசாத்திடம் விமலாதேவி புகார் அளித்தார்.எஸ்.பி., உத்தரவில் சுதர்சன், பெற்றோர் சுந்தரராஜன், மாலதி, சகோதரி சக்திபிரியா, கணவர் விக்னேஷ்வரன் மீது தேனி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Mecca Shivan
ஜூலை 07, 2025 09:20

வரதட்சணை பெறுவதே குற்றம் ..அது எப்படி பட்ட பொருளாக அல்லது பணமாக நகையாக இருந்தாலும் .. அதிலும் காதல் திருமணத்தில் வரதட்சிணை கொடுத்த பெண் வீட்டாரும் குற்றவாளியே ..இருவரும் விரும்பி திருமண செய்யும்போது பணம் நகை எங்கிருந்து வந்தது ? அப்படியென்றால் இந்த ஆண்ட சாதி சுதர்ஷன் திட்டமிட்டே அந்த பெண்ணை காதலித்துள்ளான் என்பது தெரிகிறது


rasaa
ஜூலை 06, 2025 22:26

தவறான ஒருவரை, பெற்றோரை தவிர்த்து தேர்ந்தெடுத்ததின் விளைவு.


வனஜா
ஜூலை 06, 2025 16:12

பெண்களே கோழையாக இருக்காதீர்கள்.


N Sasikumar Yadhav
ஜூலை 06, 2025 14:05

பெரிய யோக்கியன் மாதிரி பேசுகிறான் . கைது செய்து தூக்குல போடுங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை