உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / இரவு பிரியாணி சாப்பிட்டு உறங்கிய எட்டு வயது சிறுவன் உயிரிழப்பு

இரவு பிரியாணி சாப்பிட்டு உறங்கிய எட்டு வயது சிறுவன் உயிரிழப்பு

கோவை; சரவணம்பட்டி பகுதியில், இரவில் பிரியாணி சாப்பிட்டு உறங்கிய சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.சரவணம்பட்டி, செந்தில் கோல்டன் கேட் பேஸ் ஒன்றில் வசித்து வருபவர் சத்திய பிரபு; இவரது மகன் சஞ்சீவ், 8 தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, சரவணம்பட்டி சாலையில் உள்ள ஒரு பிரியாணி கடையில், பிரியாணி வாங்கி வீட்டில் இருந்த அனைவரும் சாப்பிட்டனர்.சிறுவன் சஞ்சீவும் பிரியாணி சாப்பிட்டு விட்டு, இரவு 12:00 மணி வரை விளைாயடிக்கொண்டிருந்தார். பின்னர், அனைவரும் உறங்க சென்றனர். நேற்று காலை அனைவரும் எழுந்த பிறகும், சஞ்சீவ் எந்த அசைவும் இன்றி படுக்கையில் இருந்தார். இதையடுத்து, அவரது பெற்றோர் சஞ்சீவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் சிறுவனை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கூறினர். அரசு மருத்துவமனையில் அவரை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். தகவல் அறிந்த சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுவனின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Keyan
ஜூன் 04, 2025 21:23

இந்த சிறுவன் பிரியாணிக்காக உயிரிழந்தான் என்பது உறுதியாக தெரியாவிட்டாலும் வேறு காரணங்களும் இருக்கலாம் ஆனால் ஒன்று நிச்சயம் இப்போது போல் வாரத்திற்கு மூன்று நான்கு முறை அசைவ உணவுகளை எடுத்தால் இப்போது இருக்கும் இடம் வயதினார்கள் 25 30 வயதிற்குள் நிரந்தர நோயாளிகளாகவும் அல்லது 35 வயதுக்குள் இறப்பு என்பது சர்வசாதாரண நிகழ்வாக இருக்கும் நன்கு உடல் உழைப்பு இருப்பவர்கள் அவர் நீ உடல் சத்துக்காக சிறிது தினமும் கூட அசைவம் எடுக்கலாம் ஆனால் உடல் உழைப்பே இல்லாதவர்கள் தேவைக்கு அதிகமாக அல்லது அடிக்கடி அளவுக்கு அதிகமாக எடுப்பது மிக தவறு


சண்முகம்
ஜூன் 01, 2025 03:07

படத்தில் காண்பித்து இருப்பது புழு பிரியாணியா?


lana
மே 31, 2025 13:21

இன்னும் ஒரு படி மேலே போய் இரவு 12 மணிக்கு பிரியாணி. இதை நாம் எதிர்த்தால் boomer அங்கிள். நம் பாடங்கள் குறைந்த பட்சம் இது போன்ற நடைமுறை வாழ்க்கை தவறை யாவது தவிர்க்க படி இருக்க வேண்டும்


Padmasridharan
மே 31, 2025 11:09

தெருவுக்கு பல பிரியாணி கடைகள், பேருக்கு மட்டும். என்ன போடறாங்கனும் தெரியாது எப்படி, யார் செய்றாங்கன்னும் தெரியாது. . சுவைக்க நல்லா இருந்தா போதும்னு வாங்கி சாப்பிடறது. என்னதான் இருந்தாலும் வீட்டில் செய்த சாப்பாடு போல வருமா. .


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 31, 2025 10:34

ஒரு நேரம் சாப்பிட்ட மாமிச உணவு முழுமையாக செரித்து முடிக்க 48 மணி நேரம் ஆகும். முன்னர் எல்லாம் ஞாயிற்றுக்கிழமை மதியம் மட்டுமே வீடுகளில் தயாரித்த மாமிச உணவை சாப்பிட்டு வந்தனர். வார நாட்களில் சாப்பிட மாட்டார்கள். ஆனால் இப்போது காலை மாலை இரவு என மூன்று நேரமும் வாரத்தில் ஏழு நாட்களும் சாப்பிடுகின்றனர். அதுவும் நேரம் தவறி கண்ட கண்ட நேரங்களில் சாப்பிடும் பழக்கம் வந்து விட்டது. செரிமான பிரச்சினை சர்க்கரை அளவு கொலோஸ்ட்ரால் அளவு மற்றும் உடல் சமநிலையை இழப்பு போன்றவை வந்து விட்டது. எந்த காலத்திற்கும் எப்போதும் ஏற்ற உணவு சைவ உணவு வகைகள் மட்டுமே. அதுவும் அளவோடு சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். நேரம் தவறி உண்ணக்கூடாது. சைவ உணவு வகைகள் எப்பொழுதும் உடலுக்கு நன்மை தரும். பெருமைக்கு மாமிசம் சாப்பிடுவது நல்லது அல்ல.


யமராஜ்
மே 31, 2025 10:13

பிரியாணி போட்டுத் தள்ளிட்டு.வீட்டில் சமைச்சு சாப்புடுங்க. வெளியில் சாப்புட்டா உயிருக்கு கேரண்ட்டி இல்லை.


Keyan
ஜூன் 04, 2025 21:26

எத்தனை முறை எடுத்துச் சொன்னாலும் எவன் காது கொடுத்து கேட்கிறான் எல்லோரும் ஆசை வைத்து தான் அடிமை ஆதி இருக்கிறார்கள் இதன் பின் விளைவுகளை பற்றி அவர்கள் புரிந்து கொள்ளவில்லையா அல்லது பொறுப்பற்றதனமா...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை