வாசகர்கள் கருத்துகள் ( 1 )
1947ல் துவங்கப்பட்டு, தற்போது பவள விழா காணும் இப்பள்ளியில் 19 மாணவ மாணவிகள் தான் படிக்கிறார்களா?
மேலும் செய்திகள்
எம்.சி.சி., இணையதளம் முடக்கம்: மாணவர்கள் அவதி
17-Oct-2025
திருப்பூர்: தனியார் பள்ளிகளுக்கு நிகராக, வெள்ளகோவில் அருகே, அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சார்பில் உருவாக்கப்பட்டுள்ள இணையதளம், பெற்றோர் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே, சிலம்பகவுண்டன்வலசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்படுகிறது; 19 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.பள்ளி தலைமையாசிரியர் பிரபாகரன் முயற்சியால், பள்ளிக்கென http://sgvschool.in என்ற பெயரில் பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், பள்ளி மேலாண்மை குழுவின் செயல்பாடு, மாணவர்களுக்கென ஏற்படுத்தப்பட்டுள்ள நுாலக வசதி, தன்னார்வலர்களின் உதவியால் ஏற்படுத்தப்பட்ட உள்ளரங்கம் உள்ளிட்ட கட்டமைப்புகள், மாணவ, மாணவியரின் தனித்திறமைகள் என அனைத்து விவரங்களும், புகைப்படத்துடன் இடம் பெற்றுள்ளன.இதுதவிர, பள்ளிகளில் நடத்தப்படும் நிகழ்ச்சியில், மாணவ, மாணவியரின் பங்களிப்பு, நடனம் ஆகியவையும், பேச்சு, ஓவியம், கோலம் உட்பட பல்வேறு போட்டிகள் தொடர்பான வீடியோக்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், அதனால் மாணவர்களுக்கு கிடைத்துள்ள பலன்கள் குறித்த விவரமும் இடம் பெற்றுள்ளன. இது, பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.பள்ளி தலைமையாசிரியர் கூறுகையில்,''கடந்த, 1947ல் துவங்கப்பட்ட இப்பள்ளி, பவள விழா கண்டுள்ளது. மாணவர் நலன் கருதி, காலை உணவு திட்டத்தை சில ஆண்டுகள் முன்பே துவக்கினோம். பள்ளி மாணவ, மாணவியரின் திறமையை வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தவும், அதன் வாயிலாக அவர்களுக்கான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலும், இணையதளம் உருவாக்கியுள்ளோம்,'' என்றார்.
1947ல் துவங்கப்பட்டு, தற்போது பவள விழா காணும் இப்பள்ளியில் 19 மாணவ மாணவிகள் தான் படிக்கிறார்களா?
17-Oct-2025