உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / படகு உரிமம் வழங்க ரூ.1600 லஞ்சம்; மீன்வளத்துறை ஆய்வாளர் கைது

படகு உரிமம் வழங்க ரூ.1600 லஞ்சம்; மீன்வளத்துறை ஆய்வாளர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் மீனவரின் நாட்டுப்படகிற்கு உரிமம் வழங்குவதற்கு ரூ.1600 லஞ்சம் வாங்கிய மீன்வளத்துறை ஆய்வாளர் சகுபர் சாதிக் 49, கைது செய்யப்பட்டார்.ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தைசேர்ந்த மீனவர் ஒருவர் இயந்திரம் பொருத்திய நாட்டுப் படகிற்கான உரிமம் மற்றும் கடலில் மீன் பிடிப்பதற்கான அனுமதியை பெற ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மீன் வளத்துறை ஆய்வாளர் சகுபர் சாதிக்கிடம் கடந்த வாரம் மனு அளித்துள்ளார்.அதற்கு அனுமதி வழங்க ரூ.5100 வேண்டும் எனக்கேட்டுள்ளார். அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ.3500 தானே என மீனவர் கேட்டார். தனக்கு தனியாக ரூ.1600 கொடுத்தால் தான் அனுமதி கிடைக்கும் என ஆய்வாளர் கூறினார்.எனினும் லஞ்சம் கொடுக்க விரும்பாத மீனவர் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து அவர்கள் ஆலோசனைப்படி மீனவர் , சகுபர் சாதிக்கை நேற்று அலுவலகத்தில் சந்தித்து அவரிடம் ரசாயனம் தடவிய ரூ.1600ஐ கொடுத்தார்.அப்பணத்தை வாங்கிய அவரை டி.எஸ்.பி., ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் ஊராட்சி ஓம்சக்தி நகரில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kulandai kannan
ஜூன் 27, 2025 08:31

NCC, NSS, Scout, Agniveer போன்ற அனுபவமும் மக்கள் சேவை மனப்பான்மையும் உள்ளோர் மட்டுமே அரசு மற்றும் போலீஸ் வேலைகளுக்கு தேர்ந்தெடுக்கப் படவேண்டும்.


Veera
ஜூன் 26, 2025 20:37

Sadiq name reveals everything. Thanks


Padmasridharan
ஜூன் 26, 2025 20:22

வறுத்து காயப்போடனும் இந்த மாதிரி அதிகார பிச்சைக்காரர்களை. .எல்லா துறையிலுமே. இவங்க வீட்டு வம்சத்துக்கு பாவத்தை சேர்த்து வெச்சுட்டு போகிற ஆட்கள் இவங்க எல்லாம். .


அப்பாவி
ஜூன் 25, 2025 09:51

கைது புண்ணாக்கெல்காம் எதுக்கு? நேரா ஊட்டுக்கு அனுப்பாம? ஒருவேளை கேவலமா பிசாத்து 1600 ரூவா வாங்குனதுக்கு தண்டனையா இருக்குமோ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை