உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / ரூ.18 கோடி ஜி.எஸ்.டி., நிலுவை; பிரியாணி மாஸ்டர் கடும் அதிர்ச்சி

ரூ.18 கோடி ஜி.எஸ்.டி., நிலுவை; பிரியாணி மாஸ்டர் கடும் அதிர்ச்சி

திருப்பத்துார்: பிரியாணி மாஸ்டர், 18 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., நிலுவை செலுத்த வேண்டும் என நோட்டீஸ் வந்துள்ளதால், அவர் அதிர்ச்சியடைந்து போலீசில் புகார் அளித்துள்ளார். திருப்பத்துார் மாவட்டம், துரைசாமி வட்டம் கிராமத்தை சேர்ந்தவர் அமீர்பாஷா, 33; பிரியாணி மாஸ்டர். இவருக்கு, சில நாட்களுக்கு முன், வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து கடிதம் வந்தது . அதில், அமீர்பாஷா, சென்னையில், 'அமீர் டிரேடிங் அன் கோ' என்ற நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதில், 18 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், அதை உடனடியாக செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. அதிர்ச்சியடைந்த அவர், 'என் பான்கார்டை யாரோ தவறாக பயன்படுத்தி மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, திருப்பத்துார் எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி