வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இவரல்லவோ மனிதர்..நேர்மையானர்களை பார்ப்பதே அறிதாகிவிட்ட காலம். இவரைப்போன்றவர்களால்தான் நாட்டில் இன்னும் மழை பெய்கிறது.
திருப்பூர்: காங்கயத்தில் வாக்கிங் சென்றபோது கிடந்த தங்க செயினை போலீஸ்காரர் கண்டறிந்து, ஸ்டேஷனில் ஒப்படைத்தார்.காங்கயம் போலீஸ் ஸ்டேஷனில் முதல்நிலை போலீசாக பாலுசாமி, 32 என்பவர் பணியாற்றி வந்தார். காங்கயம் இன்ஸ்பெக்டருக்கு டிரைவராக உள்ளார். நேற்று காலை காங்கயம் - பழைய கோட்டை ரோட்டில் வாக்கிங் சென்றபோது,ஒரு சவரன் தங்க செயினை கண்டெடுத்தார். யாரும் உரிமை கோரவில்லை. காங்கயம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., கபில்தேவிடம் ஒப்படைத்தார். நகையை தவற விட்டு சென்றவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். போலீசாரின் நேர்மையை எஸ்.பி., - ஏ.எஸ்.பி., இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் பாராட்டினர்.
இவரல்லவோ மனிதர்..நேர்மையானர்களை பார்ப்பதே அறிதாகிவிட்ட காலம். இவரைப்போன்றவர்களால்தான் நாட்டில் இன்னும் மழை பெய்கிறது.