உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / உதட்டை கடித்து குதறிய கணவன்; மனைவிக்கு 16 தையல்கள்

உதட்டை கடித்து குதறிய கணவன்; மனைவிக்கு 16 தையல்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரா; உத்தர பிரதேசத்தில் மனைவியுடன் சண்டை போட்ட கணவன் வாக்குவாதத்தின் முடிவில், மனைவியின் உதட்டை கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உ.பி.,யின் மதுரா மாவட்டத்தில் உள்ள நாக்லா பூசான் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் கணவர் விஷ்ணு மற்றும் அவரது குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். எந்தவொரு காரணமும் இன்றி, மனைவியுடன் சண்டை போடுவதை விஷ்ணு வழக்கமாக வைத்திருந்தார்.கடந்த 24ம் தேதி மாலை, பணியில் இருந்து வீடு திரும்பிய அவர், மீண்டும் தன் மனைவியிடம் தேவையில்லாமல் சண்டை போட்டார். பதிலுக்கு அமைதியாக இருக்கும்படி மனைவி கூறிய நிலையில், அவரை சரமாரியாக தாக்கினார்.தடுக்க வந்த தன் சகோதரியையும் விஷ்ணு தாக்கியதாக கூறப்படுகிறது. மனைவியை தொடர்ந்து அடித்து துன்புறுத்திய அவர், ஒரு கட்டத்தில் ஆத்திரம் தாங்காமல் மனைவியின் உதட்டை கடித்து குதறினார்.அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த பெண் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு காயம்பட்ட உதட்டில், 16 தையல்கள் போடப்பட்டன.இந்த சம்பவம் குறித்து பெண்ணின் தந்தை போலீசில் புகார் அளித்தார். மருத்துவமனைக்கு விரைந்த போலீசார், அப்பெண்ணிடம் நடந்ததை கேட்டறிந்தனர். பேச முடியாத நிலையில், தனக்கு நேர்ந்த அவலங்களை எழுத்துப்பூர்வமாக அவர் தெரிவித்தார்.இதையடுத்து, கணவன் விஷ்ணு, அவரின் சகோதரர் மற்றும் தாயாரை தேடி போலீசார் சென்றனர். ஆனால், அவர்கள் வீட்டில் இருந்து மாயமாகினர். தலைமறைவான அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Nethiadi
ஜன 31, 2025 10:43

...போலவே அவரோட மாநிலம் இருக்கிறது.


Bala Subramanian
ஜன 29, 2025 13:59

Tamil Nadu People are very happy Here they are very much happy with the ample availability of alcohol So, they only kill their wife will not do ugly things like this...


Sivaprakasam Chinnayan
ஜன 28, 2025 12:15

This is at U.P. and not a suprising news. Most of the people are depressed there


visu
ஜன 27, 2025 22:23

ஏங்க கடிக்கிறவரை உதட்டை காட்டிக்கொண்டா இருந்தாங்க இது சண்டை மாதிரி தெரியலே


kesavan.C.P.
ஜன 27, 2025 18:44

மனைவியின் உதட்டை கடித்து குதறியது கணவன் என்பது சந்தேகத்துக்கு இடமின்றி உதடு கடிபட்டவர் எழுத்து மூலமாக எழுதி கொடுத்துள்ளார் . காவல்துறை உதட்டை. கடித்த கணவனின் தம்பி , தாய் இருவரை துன்புருத்தாமல் இருக்க வேண்டும்.


அப்பாவி
ஜன 27, 2025 15:25

கும்பமேளாவுக்கு ஓடிப்போய் ஒளிஞ்சிட்டிருப்பாங்க. நல்லா தேடுங்க.


Barakat Ali
ஜன 27, 2025 08:47

அவரை உடனடியாக கமல்ஹாசன் ம நீ ம வில் சேர்க்கணும் .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை