உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல /  கூல்டிரிங்க்ஸ் கடை என்ற பெயரில் திறக்கப்பட்ட டாஸ்மாக்கிற்கு பூட்டு

 கூல்டிரிங்க்ஸ் கடை என்ற பெயரில் திறக்கப்பட்ட டாஸ்மாக்கிற்கு பூட்டு

திருப்பத்துார்: 'கூல்டிரிங்க்ஸ் கடை' என பெயர் பலகை வைத்து, டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த மக்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், இரண்டே நாளில் கடைக்கு பூட்டு போடப்பட்டது. திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர், எம்.வி.சாமி நகரில், புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க, ஆறு மாதத்திற்கு முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தியதால், கடை அமைக்கப்படவில்லை. இரண்டு நாட்களுக்கு முன், ஜி.எஸ்., கூல்டிரிங்க்ஸ் கடை என பெயர் பலகை வைத்துவிட்டு, உள்ளே டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு இயங்கியது. இதனால் ஆத்திர மடைந்த அப்பகுதி மக்கள், நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில், கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால், ஊழியர்கள் கடையை மூடி சென்றனர். இதனிடையே, நேற்றும் வழக்கம்போல் மதியம் 12:00 மணிக்கு கடை திறக்கப்பட்டது. இதனால் ஆவேச மடைந்த மக்கள், மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாலை, 5:00 மணி வரை போராட்டம் நீடித்தது. மக்களிடம், கடை ஊழியர்களே பேச்சு நடத்தினர். கடையை நிரந்தரமாக மூடுவதாக கூறிவிட்டு, உயர் அதிகாரிகளிடம் பேசினர். தொடர்ந்து, 5:00 மணிக்கு கடை மூடப்பட்டது. மக்களும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

sasikumaren
ஜன 15, 2026 22:44

இந்த முறையில் எல்லா கிராமங்களில் நகரங்களில் இதை மக்கள் கொண்டு வர வேண்டும் மக்கள் மதங்களை ஒன்றாகி போராட வேண்டும்


N Sasikumar Yadhav
ஜன 14, 2026 19:12

இதுதான் திமுகவின் திராவிடியாத்தனம் என சொல்வாங்க


Mani . V
ஜன 14, 2026 06:19

உலகமே போற்றும் திராவிட மாடல் ஆட்சி என்று நேற்றுத்தான் அந்த ஈமுக்கோழி சொன்னான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை