உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / உலக அழகி போட்டியில் கலாசார துாதர் பட்டம் வென்ற முதுகுளத்துார் பெண்

உலக அழகி போட்டியில் கலாசார துாதர் பட்டம் வென்ற முதுகுளத்துார் பெண்

முதுகுளத்துார்: தாய்லாந்தில் நடைபெற்ற 'மிஸ் ஹெரிடேஜ் இன்டர்நேஷனல் 2025' அழகி போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துாரை சேர்ந்த பி.டெக் பட்டதாரி ஜோதிமலர் 28, கலாசார துாதராக பட்டம் பெற்றுள்ளார். முதுகுளத்துார் அருகே தெற்குகாக்கூர் சேர்ந்த விவசாயி கஜேந்திர பிரபு, - அல்லிராணி ஆகியோரின் மகள் ஜோதிமலர் 28, பி.டெக் முடித்து ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சிலமாதங்களுக்கு முன்பு புனேயில் நடைபெற்ற போட்டியில் தேசிய அளவிலான மிஸ் டூரிசம் அம்பாசிடர் ஹெரிடேஜ் இந்தியா 2025ல் பட்டம் பெற்றார். பின்பு தாய்லாந்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற 'மிஸ் ஹெரிடேஜ் இன்டர்நேஷனல் 2025' அழகி போட்டியில் ஜோதிமலர் கலந்து கொண்டார். இதில் 30 நாடுகளில் இருந்து பெண்கள் கலந்து கொண்டனர். ஆழ்ந்த கலாசார அறிவு, கருணை, பன்முகத்தன்மை மூலம் ஒற்றுமை என்ற தனது செய்தியால் நடுவர்களை ஜோதிமலர் ஆச்சரியப்படுத்தினார். இதையடுத்து இவருக்கு கலாசார துாதர் பட்டம் வழங்கப்பட்டது. ஜோதிமலர் கூறியதாவது: சர்வதேச மேடையில் ஒரு இந்திய பிரதிநிதி கலாசார துாதர் பட்டத்தை வென்றது இதுவே முதல் முறை. கலாசார துாதராவது கிரீடத்தை விட மேலானது. சர்வதேச அரங்கில் எனது நாட்டின் வண்ணங்கள், மரபுகள், கதைகளை பிரதிநிதித்துவபடுத்துவதற்காக நான் பெருமைப்படுகிறேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை