உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / பள்ளிக்கு ஒரு கோடி ரூபாய்; முன்னாள் மாணவர் தாராளம்

பள்ளிக்கு ஒரு கோடி ரூபாய்; முன்னாள் மாணவர் தாராளம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை; கோவையில் அரசு நிதிஉதவியுடன் செயல்படும் தேவாங்க மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பள்ளியின் முன்னாள் மாணவர் ஒருவர், ஒரு கோடி ரூபாய் வைப்பு நிதியாக பள்ளிக்கு வழங்கினார். இப்பள்ளியில், 1975ம் ஆண்டு தொடங்கப்பட்ட முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் 50வது பொன்விழா, ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் பொன்விழா நிகழ்ச்சி, பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. பள்ளிக்குழு தலைவர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 2024-25 கல்வியாண்டில் பிளஸ் 2, பிளஸ் 1, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மற்றும் பாடத்தேர்வில் 'சென்டம்' எடுத்த மாணவர்களுக்கு, ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. சாதனை படைத்த முன்னாள் மாணவர்களுக்கும், ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கும், நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. ஒரு கோடி ரூபாய் நிதி இப்பள்ளியில் 1962ல் பயின்ற முன்னாள் மாணவரும், கோவையைச் சேர்ந்த தொழிலதிபருமான அழகிரி தாமோதரன், பள்ளி மேம்பாட்டிற்காக ஒரு கோடி ரூபாய் வைப்பு நிதியாக வழங்கினார். இந்த நிதியை பயன்படுத்தி, மாணவர்களின் கல்வித்திறன் வளர்ச்சி, விளையாட்டு உள்ளிட்ட பிற துறைகளில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அழகிரி தாமோதரன் கூறுகையில், ''நான் கல்வி பெற்ற பள்ளிக்காக, ஒரு சிறிய பங்களிப்பாகவே இந்த நிதியை வழங்குகிறேன்,'' என தெரிவித்தார். நிகழ்ச்சியில், முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர் ஆத்மலிங்கம், உப தலைவர் ஜெகதீசன், பொது செயலாளர் பசுபதி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ram pollachi
ஜூலை 28, 2025 17:48

இன்றைய காலத்தில் காசுக்கு மதிப்பே இல்லை . எனக்கு தெரிய ஒரு கோவிலுக்கு ஒரு தொழில் அதிபர் அரை கோடி செலவில் தகர கொட்டகை போட்டு கொடுத்தார் அதை பார்த்த என் நண்பர் இந்த தொகையில் பாதி எனக்கு வர வேண்டிய பணம் என்றார்... உழைத்த காசை தர்மமாக கொடுத்தால் மனதார பாராட்டலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை