உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / போலீஸ் ஸ்டேஷனில் பெண் போலீசார் உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா: ஆபாச வீடியோ எடுத்த போலீஸ்காரர் கைது

போலீஸ் ஸ்டேஷனில் பெண் போலீசார் உடைமாற்றும் அறையில் ரகசிய கேமரா: ஆபாச வீடியோ எடுத்த போலீஸ்காரர் கைது

மூணாறு:போலீஸ் ஸ்டேஷனில் பெண் போலீசார் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்தி ஆபாச வீடியோ எடுத்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.இடுக்கி மாவட்டம், வண்டிபெரியாறு போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தவர் வைசாக் 39. இவர், அதே போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் பெண் போலீசுக்கு, அவர் உடை மாற்றும் ஆபாச வீடியோவை அனுப்பி மிரட்டியுள்ளார். ஆபாச வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் போலீஸ், இடுக்கி மகளிர் போலீஸ் பிரிவில் புகார் அளித்தார். இடுக்கி சைபர் கிரைம் போலீசார் விசாரித்தபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன.போலீஸ் ஸ்டேஷனில் பெண் போலீசார் உடைமாற்றும் அறையில் ரகசிய கேமராவை பொருத்திய வைசாக், அதனை தனது அலைபேசியுடன் இணைத்துள்ளார். அதில் பெண் போலீசார் உடைமாற்றும் ஆபாச வீடியோக்களை பதிவு செய்துள்ளார். சபரிமலை மண்டல காலம் முதல் கடந்த ஏழு மாதங்களாக ஆபாச வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டதாக தெரியவந்தது. இடுக்கி எஸ்.பி., விஷ்ணுபிரதீப் உத்தரவுபடி வைசாக்கை நேற்று போலீசார் கைது செய்தனர். அவரது அலைபேசியை கைப்பற்றி ஆய்வு நடத்தியபோது ஆபாச வீடியோக்கள் ஏராளம் இருந்தன.இது குறித்து எஸ்.பி., விஷ்ணு பிரதீப் கூறியதாவது: வண்டி பெரியாறு போலீஸ் ஸ்டேஷனில் நடந்த சம்பவம் போலீஸ் துறைக்கு கடும் வெட்கக்கேட்டை ஏற்படுத்தியுள்ளது. வைசாக்கை போலீஸ் காவலில் எடுத்து சம்பவம் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்படும். அவர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார், என்றார்.போலீஸ் ஸ்டேஷனில் பெண் போலீசாருக்கு கூட பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளதால், வண்டி பெரியாறு சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Anbu Prahasri
ஜூன் 17, 2025 12:55

அடக்கடவுளே, என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சாமானியர்களின் குற்றங்களைக் காட்டிலும் பொறுப்புள்ள அரசு அதிகாரிகள் செய்யும் தவறுகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். காவல் நிலையத்தில் உள்ளே, பணிபுரியும் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை. அதிலும் கொடுமை அந்த குற்றம் செய்பவர் மற்றொரு காவலரே. இந்த காவல்துறையா இங்கு குற்றங்களை தடுக்கும் என்ற அவநம்பிக்கையே மக்கள் மனதில் தோன்றும்.


Muthuselvan Ponnaiyan
ஜூன் 16, 2025 17:56

நிரூபணம் ஆகும் பட்சத்தில் குற்றம் புரிந்தவரை கட்டாயம் பணி நீக்கம் செய்ய வேண்டும், பணிஇடைநீக்கம் பலன் தராது.


Padmasridharan
ஜூன் 13, 2025 17:36

புகார் அளித்த அந்த தைரியமான பெண்ணுக்கு வாழ்த்துகள்.. காவல் உடையில் இந்த மாதிரி நிறைய வெட்கக்கேடான அதிகார ஆட்கள் உலவிக்கொண்டுதான் இருக்கின்றனர். .


KRISHNAN R
ஜூன் 14, 2025 09:07

அந்தம்மா ஒரு போலீசு.. இல்லேன்னா ஆடு திருட்டு போகவில்ல என்று கேஸ் முடிக்கப்பட்டு விடும்


Kulandai kannan
ஜூன் 13, 2025 16:31

சேட்டன் சேட்டை


RRR
ஜூன் 13, 2025 12:39

100% படித்தவர்கள் உள்ள மாநிலம் என்று பெருமைப்பட்டுக்கொள்கிறார்கள் கேரளாவில்... ஆனால் அவர்களின் புத்தியெல்லாம் ஈனத்தனமானது...


குணேஷ்
ஜூன் 13, 2025 09:51

போலீஸ்காரனும் திருட்டு திராவிடன் தான். சின்ப வயசிலிருந்து நல்லா வளர்க்கப் படலை. எவ்ளோ லஞ்சம் குடுத்து வேலைக்கு சேர்ந்தானோ? போலீஸ்துறை அமைச்சருக்கே வெளிச்சம்.


SIVA
ஜூன் 13, 2025 08:35

இவர் இப்போது கைதி இவர் பாத்ரூம் போகும் போது வழுக்கி விழுவாரா .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை