உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / மூளைச்சாவு அடைந்தவரால் ஆறு பேருக்கு மறுவாழ்வு

மூளைச்சாவு அடைந்தவரால் ஆறு பேருக்கு மறுவாழ்வு

மதுரை : ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியைச் சேர்ந்த சஞ்சய் 22, விபத்தில் அடிபட்டு மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரது உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டு 6 பேருக்கு பொருத்தப்பட்டன. ராமநாதபுரம் கடலாடி மேலகிடாரத்தைச் சேர்ந்த சஞ்சய் டிச. 22 அதிகாலையில் ரோடு விபத்தில் சிக்கினார். மேல் சிகிச்சைக்காக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு டிச.,24 ல் மூளைச்சாவு நிலையை அடைந்தார். உறுப்புகள் தானம் குறித்து டாக்டர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்திய போது உறவினர்கள் சம்மதித்தனர். சிறுநீரகங்களில் ஒன்று இதே மருத்துவமனை நோயாளிக்கும், மற்றொன்று திருச்சி எஸ்.ஆர்.எம்., மருத்துவமனை நோயாளிக்கும் வழங்கப்பட்டது. கல்லீரல் மதுரை வடமலையான் மருத்துவமனைக்கும், இதயம் சென்னை எம்.ஜி.எம்., மருத்துவமனைக்கும் கருவிழிகள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டது. இளைஞரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி