வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வீடியோ எடுத்து வெளியிலே விடறதுக்கு பதிலா, அப்போதே அந்த ஓட்டுநர்கிட்டே சொல்லியிருக்கலாமே? அப்பவும் அவர் கேக்கலேனா, வீடியோவை வெளியிட்டிருக்கலாம்.. வீடியோ / ரீல்ஸ் மோகம் மக்களைப் பேயா பிடிச்சு ஆட்டுது!
முதுகுளத்துார்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துாரில் இருந்து மதுரை சென்ற அரசு பஸ்சை அலைபேசிபேசியபடி டிரைவர் ஓட்டியதால் பயணிகள் அச்சமடைந்தனர். இந்த வீடியோ வைலராகிறது. முதுகுளத்துார் பணிமனையில் இருந்து பரமக்குடி, மானாமதுரை, திருப்புவனம் வழியாக மதுரைக்கு அரசு பஸ் இயக்கப்படுகிறது. நேற்று மதுரைக்கு சென்ற பஸ்சை டிரைவர் ரத்தினம் அலைபேசியில் பேசியபடி சிறிது துாரம் ஓட்டினார். இதனை பயணி ஒருவர் அலைபேசியில் வீடியோ எடுத்துள்ளார். ஒற்றைக் கையில் டிரைவர் பஸ்சை ஓட்டியதால் பயணிகள் அச்சமடைந்தனர். இந்த வீடியோ தற்போது பரவுகிறது. இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர். காரைக்குடி போக்குவரத்து கழக அதிகாரி கூறுகையில், ' சம்பந்தப்பட்ட டிரைவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
வீடியோ எடுத்து வெளியிலே விடறதுக்கு பதிலா, அப்போதே அந்த ஓட்டுநர்கிட்டே சொல்லியிருக்கலாமே? அப்பவும் அவர் கேக்கலேனா, வீடியோவை வெளியிட்டிருக்கலாம்.. வீடியோ / ரீல்ஸ் மோகம் மக்களைப் பேயா பிடிச்சு ஆட்டுது!