உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / ஒன்பது வயதில் 18 முறை சபரிமலை வந்த சிறுமி

ஒன்பது வயதில் 18 முறை சபரிமலை வந்த சிறுமி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சபரிமலை; ஒன்பது வயதில் 18-வது முறையாக சபரிமலை வந்த சிறுமி தென்னங்கன்றுடன் வந்து தரிசனம் செய்தார்.கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே பாப்பனங்கோடு எஸ்டேட்டைச் சேர்ந்தவர் ஜீவன் குமார் -- ராஜஸ்ரீ தம்பதி. இவர்களது இரண்டாவது மகள் நவநீது. ஒன்பது வயதான இவர் பாப்பனங்கோடு சுவாமி விவேகானந்தா மிஷன் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கிறார்.தன் 4 வயதில் தந்தையின் தோளில் அமர்ந்து முதன் முறையாக சபரிமலைக்கு வந்தார். அதன் பின்னர் பள்ளி வகுப்பு முடங்காமல் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாத பூஜைக்கு நடை திறக்கும் நாட்களில் சபரிமலைக்கு வந்து ஐயப்பனை வணங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.நேற்று முன்தினம் 18 வது முறையாக அவர் சபரிமலைக்கு வந்தார். 18 முறை சபரிமலை வந்தவர்கள் இங்கு தென்னங்கன்று நடுவது வழக்கம். அதன்படி இந்த சிறுமியும் தென்னங்கற்றுடன் வந்து தரிசனம் செய்த பின் ஸ்ரீ கோயிலின் பின்புறம் தென்னங்கன்றுகளை நட்டார்.சிறுமி கூறுகையில், ''ஒருமுறை சபரிமலை வந்து ஐயப்பனை வணங்கிய பின்னர் மீண்டும் மீண்டும் வரவேண்டும் என்று ஆவல் ஏற்பட்டது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தந்தையுடன் சபரிமலை வந்தேன். சகோதரி நவநீதா 8ம் வகுப்பு படிக்கிறார். அவர் ஏழு முறை சபரிமலை வந்துள்ளார்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

pmsamy
நவ 28, 2024 11:51

she will make India a superpower


மணிகண்டன்
நவ 28, 2024 08:46

18 முறை என்பது வருடத்திற்கு ஒரு முறை என்ற கணக்கில் சென்று வர வேண்டும். மாதா மாதம் சென்று கணக்கு எழுத கூடாது.


Sck
நவ 28, 2024 05:49

சந்தோஷம். பாப்பா அப்ப வருஷத்துக்கு 2முறை மலைக்கு போகுதா. வெரி குட். பள்ளிக்கு எப்ப போவும். எப்ப படிக்கும்? 9 வயசாகுதே அதான் கேட்டேன்.


vira
நவ 26, 2024 20:47

saranam ayyappa


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை