உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / மேஜையில் லஞ்ச எச்சரிக்கை போர்டு வைத்த அதிகாரி

மேஜையில் லஞ்ச எச்சரிக்கை போர்டு வைத்த அதிகாரி

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், சாத்துார் நெடுஞ்சாலைத்துறை இளநிலை பொறியாளர் மாரிமுத்து, 56, 'லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் தண்டனைக்குரிய குற்றம்' என, தன் மேஜை மீது 'போர்டு' வைத்துள்ளார்.விருதுநகரை சேர்ந்த இவர், சாத்துாரில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமான பராமரிப்பு பிரிவில் இளநிலை பொறியாளராக பொறுப்பேற்றார். முன்னதாக, துாத்துக்குடியில் பணிபுரிந்தார். இவர் தன் மேஜை மீது, லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் தண்டனைக்குரிய குற்றம் என, போர்டு வைத்துள்ளார்.மாரிமுத்துவின் இந்த செயலுக்கு, பலரும் பாராட்டு தெரிவித்தனர். கடந்த, 2021 சட்டசபை தேர்தலின் போது கோவில்பட்டி தொகுதியில் பறக்கும் படை அதிகாரியாக செயல்பட்ட இவர், அப்போது அ.தி.மு.க., அமைச்சராக இருந்த கடம்பூர் ராஜு மீது, தேர்தல் விதிமீறல் வழக்கு பதிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

சூரியா
நவ 05, 2026 17:33

பால் வெள்ளை நிறத்தில் இருக்கும் என்று ஒரு போர்டு வைத்தால் எப்படியோ, அதைப் போல இந்த போர்டும் இருக்கிறது. தான் லஞ்சம் வாங்காமல் நெஞ்சம் நிமிர்த்திப் பணி செய்வேன் என்று போர்டு வைக்க வேண்டும். அப்படி இவர் வைத்தால், மற்ற அலுவலர்களும் வைக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவர்.


அப்பாவி
நவ 05, 2026 11:25

சரி.. வேலை நடக்குமா?


Tetra
நவ 05, 2026 08:20

அதாவது அவரது இருக்கையில. மத்த இடத்த சொல்லலீங்கோ


Sanjit
நவ 05, 2026 06:40

very good initiative should follow by other's too