உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / நுண்ணுயிரிகள் விடும் சவாலை எதிர்கொள்ள என்ன வழி?

நுண்ணுயிரிகள் விடும் சவாலை எதிர்கொள்ள என்ன வழி?

எத்தனை தான் செல்வந்தராக, சாதனையாளராக இருந்தாலும், தொற்று நோய் பாதிப்பு வந்து விட்டால், ஒன்றும் செய்ய முடிவதில்லை. பல பிரபலங்களும், வசதி படைத்தவர்களும், கொரோனா தொற்றுக்கு பலியானதை, சில ஆண்டுகளுக்கு முன் நாம் அனைவரும் பார்த்தோம்.கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிரி எங்கு இருக்கும் என்று தெரியாமல், பொருட்களை தொடுவதற்கும், மற்றவர்களிடம் பேசுவதற்கும் பயந்து, பல வாரங்கள் வீட்டிலேயே அடைந்து கிடந்தோம்.மனித இனத்தை விட, 10 மடங்கு அதிகமாக, இந்த பூமியில் நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. நுண்ணுயிரி, வீரியம் பெற்று பரவும் போது, நம்மால் ஒன்றும் செய்ய முடிவதில்லை. எத்தனை தடுப்பூசிகள் வந்தாலும், தன் மரபணுவில் மாற்றம் செய்து, வீரியம் மிக்கதாக மாறி, நுண்ணுயிரி நமக்கு சவால் விடுகிறது. இது வைரஸ் தொற்றின் நிலை.பாக்டீரியா தொற்றிலும், வீரியமாக இருக்கும் தடுப்பூசிகள் தொற்றுகளை கட்டுக்குள் கொண்டுவந்து விடுகின்றன. உதாரணமாக, டி.பி., எனப்படும் காசநோய்க்கு, வீரியம் மிக்க மருந்துகள் உள்ளன. ஆனால், முறையாக சிகிச்சை பெறாமல், பாதியிலேயே மருந்துகளை நிறுத்துவதால், இன்றும் டி.பி., பாதிப்பால், பல லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.பெரியம்மை தொற்று, முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது; சின்னம்மை பாதிப்பு உள்ளது; போலியோ தொற்று, 99 சதவீதம் கட்டுக்குள் வந்து விட்டது.நம்மிடம் இருந்து ரத்தத்தை உறிஞ்சும் கொசு, மலேரியா ஒட்டுண்ணி, டெங்கு, சிக்குன்குனியா வைரஸ் என்று பலவிதமான கிருமிகளை உடலினுள் செலுத்தி விட்டு செல்கிறது.என்னுடைய 50 வருட மருத்துவ அனுபவத்தில், இதய நோய்கள், சிறுநீரக கோளாறுகள், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை விட, தொற்று நோய் பாதிப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தான் மிக அதிகம்.கடந்த ஐந்து ஆண்டுகளாக, தொற்று பாதிப்பு மேலும் அதிகரித்து உள்ளது.

நுண்ணுயிரிகள் வீரியம் பெறுவது ஏன்?

நான் பொது அறுவை சிகிச்சை நிபுணர் என்பதால், அதிலிருந்தே உதாரணம் சொல்கிறேன். பாக்டீரியாவால் ரத்தத்தில் ஏற்படும் தொற்றை 'செப்சிஸ்' என்று அழைக்கிறோம். தொற்று வராமல் தடுப்பதற்கான வழி முறைகளை, 'ஏ செப்சிஸ்' என்று அழைக்கிறோம். பாக்டீரியா தொற்று வந்தாலே, பல வகையான ஆன்டிபயாடிக் மருந்துகளை, அளவுக்கு அதிகமாக உபயோகிக்கிறோம். பாக்டீரியாவை அழிப்பதற்கு தரப்படும் மருந்துகள், முழுமையாக தரப்படாததால், நுண்ணுயிரிகள், மருந்தை எதிர்க்கும் வீரியத்தை பெற்று விடுகின்றன.

தடுக்க என்ன வழி?

எந்த வகையான பாக்டீரியா தொற்று பாதித்துள்ளது என் பதை அறிய, 'கல்ச்சர் சென்சிடி விட்டி' பரிசோதனை செய்து, அந்த பாக்டீரியாவிற்கு, எந்த வகையான ஆன்டிபயாடிக் மருந்து தர வேண்டுமோ, அதை மட்டும் தான் கொடுக்க வேண்டும். எத்தனை நாட்களுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகளை டாக்டர் சாப்பிட சொல்கிராறோ, அத்தனை நாட்கள் சாப்பிட வேண்டும்.இரண்டு நாள் மருந்து சாப்பிட்டு, குணம் தெரிய ஆரம்பித்ததும், மருந்துகளை நிறுத்தி விட்டால், முழுமையாக அழியாத பாக்டீரியா, மருந்தை எதிர்க்கும் சக்தியை பெற்று விடும். மீண்டும் அதே உடல் பிரச்னை வரும் போது, இந்த மருந்துகள் பலன் தராது.ஆன்டி பயாடிக் மருந்துகளை, டாக்டர் சிபாரிசு இல்லாமல், வாங்கி பயன்படுத்தக் கூடாது. அரசு, தனியார் என்று எந்த மருத்துவமனையாக இருந்தாலும், தொற்று நோய் தடுப்பு பிரிவு, அதற்கான சிறப்பு பயிற்சி பெற்ற டாக்டர்கள் அவசியம் இருக்க வேண்டும்.கிருமிகள் நம் மை பாதிக்காமல் இருக்க, சுய சுகாதாரத்தை பின்பற்றுவது, இவை எல்லா வற்றையும் விட பாதுகாப்பானது.டாக்டர் ஜி.பக்தவத்சலம், தலைவர், கே.ஜி.மருத்துவமனை, கோவை. 0422 - 4042121 kghospitals.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை