மேலும் செய்திகள்
கூவிக்கூவி 'கலெக் ஷன்' அள்ளும் போலீசு!
29-Jul-2025
கா சு, பணம் இன்னிக்கு வரும், நாளைக்கு போகும். நாலு பேருக்கு நல்லது பண்றது தான், வாழ்க்கையில ரொம்ப முக்கியம்'' என்கிறார், வேல்பாண்டி. சுந்தராபுரம் அறிஞர் அண்ணா காலனியில், துணிகளுக்கு இஸ்திரி பண்ணி கொடுக்கிறார் இவர். சுந்தராபுரம் எம்.ஜி.ஆர்.நகரில் வீடு. ''நாளைய பத்தி எனக்கு பெரிய எதிர்பார்ப்பு இல்ல. இன்னிக்கு என்ன செய்றோம்னு பாக்கணும். இஸ்திரி பண்ணிக் குடுக்க, ஒரு நாளைக்கு நெறைய துணி வரும். இன்னொரு நாளைக்கு, கொஞ்சம் குறைவா இருக்கும். ஒரு நாளைக்கு 700 ரூபால இருந்து 800 ரூபா வரைக்கும் கெடைக்கும்,'' எப்படி ரொம்ப நேரம் நின்றபடி வேலை பார்க்கிறீர்கள்?''நீங்க சொல்றது உண்மைதான். ரொம்ப நேரம் நின்னு துணி தேய்க்க முடியாது. எனக்கு உதவியா என் வீட்டுக்காரம்மா பேச்சியம்மா இருக்காங்க,'' உங்கள் குடும்பத்தை பற்றி?''சொந்த ஊர் மதுர. சம்சாரம் வீட்டு வேலைக்கு போறாங்க. குடும்பத்துக்கு உதவியா இருக்கு. முதியோர் இல்லத்துக்கு மாசா மாசம் 500 ரூபா குடுத்திருவாங்க. ஒரு பையன் இருந்தான். 2016ல நடந்த விபத்துல இறந்துட்டான். அதுல குடும்பமே துவண்டு போயிருச்சு,'' ''பையன் இருந்திருந்தா எங்கள கஷ்டப்பட விட்ருக்க மாட்டான். மறக்க முடியாத வடு ஏற்பட்டிருச்சு. எங்களை நாங்களே தேத்திக்கிட்டு ஓடிட்டு இருக்கோம். பொண்ணுக்கு கல்யாணம் ஆகி பேரன், பேத்தி இருக்காங்க. உடம்புல சக்தி இருக்கற வரைக்கும் உழைப்போம்,'' இவரை தொடர்பு கொள்ள: 95977 68477.
29-Jul-2025