உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல / இன்ஜின் ஆயில் குடித்து வாழும் தொழிலாளி

இன்ஜின் ஆயில் குடித்து வாழும் தொழிலாளி

ஓசூர்; கர்நாடகா மாநிலம், சிவமொக்கா பகுதியை சேர்ந்தவர் குமார், 48. பெங்களூரு ஜாலஹள்ளி கிராஸ் பகுதியில் தங்கி, கூலிவேலை செய்-கிறார். இவர் கடந்த, 22 ஆண்டுகளாக, மோட்டார் வாகனங்களில் பயன்படுத்தப்பட்ட பழைய இன்ஜின் ஆயிலை குடித்து வருகிறார். இருமுடி கட்டி சபரிமலை செல்லும் இவர், நேற்று மாலை ஓசூர் வந்தார். ஓசூர் சப்-கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ஒரு கடையில் டீ சாப்பிட்டார். அதன் பின், தன் பாக்கெட்டில் இருந்த இன்ஜின் ஆயில் பாட்டிலை எடுத்து, பொதுமக்கள் முன்னி-லையில், வேகமாக குடித்தார். இது குறித்து குமார் கூறுகையில், ''தினமும், 8 லிட்டர் வரை பழைய இன்ஜின் ஆயிலை குடிக்-கிறேன். அதனால் என்னை ஆயில் குமார் என, அனைவரும் அழைக்கின்றனர். மெக்கானிக் கடைகளில் சென்று, பழைய இன்ஜின் ஆயிலை வாங்கி கொள்வேன். எப்போதாவது ஒருமுறை, டீ குடிப்பேன். மற்ற உணவுகளை சாப்பிட்டால், உடல் ஏற்றுக்கொள்ளாது என்பதால், உணவு-களை தவிர்த்து விடுகிறேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை