உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதப்படிங்க முதல்ல /  திருவெண்காடு கோவிலில் துர்கா பால்குடம் எடுத்து வழிபாடு

 திருவெண்காடு கோவிலில் துர்கா பால்குடம் எடுத்து வழிபாடு

மயிலாடுதுறை: சீர்காழி அருகே புதன் ஸ்தலமான திருவெண்காடு கோவிலில், பால்குடம் எடுத்து, முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா வழி பாடு நடத்தினார். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருவெண்காடு கிராமத்தில், தேவார பாடல் பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. நவகிரஹங்களில் இது புதன் ஸ்தலமாகும். இங்கு சிவபெருமானின் அம்சமான அகோரமூர்த்தி, தனி சன்னிதியில் அருள்பாலித்து வருகிறார்.அகோர மூர்த்தியை வழிபட்டால் சத்ரு உபாதைகள் நீங்கும் என்பது ஐதீகம். அகோர மூர்த்திக்கு ஞாயிறுதோறும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதில், கார்த்திகை மூன்றாவது ஞாயிறு அன்று நடைபெறும் அபிஷேகம் சிறப்பானதாக கூறப்படுகிறது. அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று நடந்த அகோரமூர்த்தி திருநாளில், தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா பால்குடம் எடுத்து வழிபட்டார். பக்தர்களுடன் கோவில் சந்திர தீர்த்தத்தில் இருந்து பால்குடம் எடுத்து, கோவிலை வலம் வந்து அகோர மூர்த்திக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினார். தொடர்ந்து, சுவாமி, அம்பாள், நடராஜர், புதன் பகவான் சன்னிதிகளுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Haja Kuthubdeen
டிச 08, 2025 16:41

பனை மரத்தில் ஒரு குத்து..தெனை மரத்தில் ஒரு குத்து...


naranam
டிச 08, 2025 15:11

அப்படியே திருப்பரங்குன்றத்தில் தீபத்தையும் ஏற்றினால் நல்லது.


theruvasagan
டிச 08, 2025 13:24

சனாதனத்தை ஒழிக்கும் சிந்தனை உள்ள இடத்திலேயே சனாதனம் புகுந்து தழைக்கும். இதைவிட சனாதனத்தின் வலிமைக்கு என்ன சான்று வேண்டும். சனாதனம் நிரந்தரம். ஒழிக்க நினைப்பவர்கள்தான் காணாமல் போவர்கள்.


ரஹிம் பாய், வேலூர்
டிச 08, 2025 11:44

இது ஏதோ வெங்காய மண் அப்டின்னு புளகாங்கிதம் அடைந்தனர் kothadimaigal.... பால் kudam எடுப்பது ஆகம விதிப்படி தவறு. தீபம் ஏற்றுவதை பழித்த தற்குறி கள் ஒருத்தன் கூட காணோம்?


lana
டிச 08, 2025 11:20

சனாதனம் டெங்கு மலரியா ன்னு ரெண்டு நோய்கள் உடனே வாழுது.


ஜோசியர்
டிச 08, 2025 07:14

திருவெண்காடு புதனுடைய ஸ்தலம். நல்ல அறிவு, விஸ்டம் வேணும்கறவங்க அங்கே வழிபடுவாங்க


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை