உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / கவனத்தில் கொள்ளட்டும் விஜய்!

கவனத்தில் கொள்ளட்டும் விஜய்!

வி.ெஹச்.கே.ஹரிஹரன், திண்டுக்கல்லில்இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ------------கட்சிக்கொடி, கட்சிப் பாட்டு, உறுதிமொழி இவைகளை அறிமுகம் செய்து விட்டார் நடிகர் விஜய்; முழுநேர அரசியல்வாதி ஆக தீர்மானித்து விட்டார்.கடந்த 1967 வரை, காங்கிரசா, கம்யூனிஸ்ட்டா என்று இருந்த தமிழகஅரசியல் களம், பின், காங்கிரசா, தி.மு.க.,வா என மாறியது. பின், 1977 முதல், தி.மு.க.,வா, அ.தி.மு.க.,வா என மாறியது.கடந்த, 1980 லோக்சபா தேர்தலில், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி வென்றது.ஆனால் அதே ஆண்டு சட்டசபை தேர்தலில், எம்.ஜி.ஆர்., அசாத்திய வெற்றி பெற்றார். அவர் மறைவுக்கு பின், 1991ல் ஜெயலலிதா முதல்வர் பதவியேற்ற நாளன்று, சந்தோஷத்தில் ஆட்டோக்காரர்கள், பயணியரிடம் வாடகைக் கட்டணம் கூட கேட்கவில்லை.பின், 1996 முதல் தி.மு.க., -அ.தி.மு.க., கட்சிகள் மட்டுமே,தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன. கிட்டத்தட்ட, 10 நடிகர்கள், தம் ரசிகர் கூட்டத்தை பார்த்து துவங்கிய கட்சிகள், அரசியல் புயலில் தாக்குப் பிடிக்க முடியவில்லை. சமீபத்தில், 2024 லோக்சபா தேர்தலில்,பா.ஜ.,வின் மாநில தலைவர் அண்ணாமலை, தி.மு.க.,வின் பிரதான எதிர்க்கட்சியாக அக்கட்சியை மாற்ற, அரும்பாடு பட்டார். பா.ஜ., கூட்டணி, 18.27 சதவீத வாக்குகளை தான் கவர முடிந்தது; ஆனால், 12 தொகுதிகளில் இரண்டாவது இடத்தை பிடித்தது.அ.தி.மு.க., துவங்கும் முன், எம்.ஜி.ஆர்., நீண்டகாலம் அரசியலில் இருந்தார்; பெண்களின், ஏழைகளின்ரட்சகராக காணப்பட்டார். விஜயகாந்த், திரைப்படங்களில் அயோக்கியர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்; நேர்மை, துணிவின் அடையாளமாக தன்னை காட்சிப்படுத்தினார். அவரது தே.மு.தி.க., சில காலம் சட்டசபை எதிர்க்கட்சியாகவும் இருந்தது.இரு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, மக்கள் அவரை நம்பினர். விஜய், தற்போது தான் மாணவர்களுக்கு பரிசுகள் கொடுத்து வாழ்த்துகிறார். தி.மு.க., ஆட்சி நடக்கும் போது, விஜய் தனிக்கட்சி துவங்குவதால், எதிர்க்கட்சியாக இருக்கவே விரும்புவதாக தெரிகிறது. அடுத்த முதல்வர் என்று அவரது கட்சி பிரசார பாடல் முழங்குகிறது. தி.மு.க.,வை விஜய் ஆதரித்தால், இன்னும், 15 ஆண்டுகளுக்கு அவர், முதல்வர் பதவியைப் பிடிக்கவே முடியாது.'கிட்டத்தட்ட, 12 சதவீத வாக்குகள் விஜய்க்கு கிடைக்கும்; 20 முதல் 40 வயதுடையோர் விஜய் பின் நிற்கின்றனர்' என, ஆய்வுகள் தெரிவிக்கின்றன.எம்.ஜி.ஆர்., மற்றும் என்.டி.ராமராவ் போல, கட்சி துவங்கிய உடன், முதல்வர்பதவிக்கு எல்லாராலும் வர முடியாது; ஆனால் லஞ்சம், ஊழல் இல்லாத ஆட்சியை முன்னிறுத்தி, இலவசங்கள் எதுவும் கொடுக்காமல், வேலை வாய்ப்பு, தொழில், விவசாய வளர்ச்சிக்கு சாத்தியமான திட்டங்களை, விஜய் முன்வைத்தால், தமிழக அரசியல் களத்தில், சலசலப்பை உண்டாக்கலாம். நடப்பு நிலவரப்படி, தி.மு.க., கூட்டணி,பா.ஜ., கூட்டணி, அ.தி.மு.க., கூட்டணி, நாம் தமிழர் கட்சி தவிர, தமிழக வெற்றிக் கழகம் தனித்து களம் இறங்கினால், தி.மு.க.,வுக்கு தான் லாபம். தேசிய ஒருமைப்பாடு, மதச் சார்பின்மை, அனைவரையும் உள்ளடங்கிய வளர்ச்சி ஆகியவை தான் அவரது இலக்கு என்றால், காங்கிரஸ் தான் அவருக்கு ஒரே சாய்ஸ். தி.மு.க.,வுக்கு சரியான மாற்று அரசியல் சக்தி தேவை தான்; ஆனால், இன்றைய அரசியலில் வெற்றி பெற, நேர்மை, ஒழுக்கம், துணிச்சல், உழைப்பு, செல்வாக்கு ஆகியவை மட்டுமே போதாது. கட்சி உட்கட்டமைப்பு, வாக்காளர்களை கவரும் பிரசாரம், அளவிலா நிதி, விசுவாசமான தொண்டர்கள், கைவசம் மீடியாக்கள் ஆகிய அனைத்தும் தேவை. நீச்சல் பழகும் குளம் அல்ல, அரசியல்; முதலைகள் நிறைந்த கடல்; கவனத்தில் கொள்ளட்டும் விஜய்----------.

முதல்வர் கூறியதில் உண்மை உண்டா?

டி.ஈஸ்வரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கருணாநிதி நுாற்றாண்டு நினைவு நாணயத்தை, மத்திய ராணுவ அமைச்சர்ராஜ்நாத் சிங், சமீபத்தில் சென்னையில் வெளியிட்டார். இதை விமர்சனம் செய்த, அ.தி.மு.க.,பொதுச்செயலர் பழனிசாமி, 'பா.ஜ.,-வுடன் தி.மு.க., ரகசிய உறவு வைத்துள்ளது' என்றார். இதற்கு மறுப்பு தெரிவித்து முதல்வர்பேசுகையில், 'எம்.ஜி.ஆர்., நாணயத் தை பழனிசாமியே வெளியிட்டார். ஏனென்றால், மத்திய அரசு அவரை ஒரு முதல்வராகவே நினைக்கவும் இல்லை; அவரை மதிக்கவும் இல்லை. எம்.ஜி.ஆர்., நாணயம் வெளியீட்டு விழாவுக்கு வர மறுத்து விட்டனர். இதுதான் அவருக்கு இருந்த மரியாதை' என்று, கூறியுள்ளார்.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலின் பிரசாரத்தின் போது, தமிழகத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை, எந்த அளவுக்கு திட்டி தீர்க்க முடியுமோ, அந்த அளவுக்கு திட்டி தீர்த்து பேசியவர் தான் முதல்வர் ஸ்டாலின். அப்படிப்பட்ட இவரையே மதித்து, கருணாநிதி நாணய வெளியீட்டு விழாவில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். ஆனால், தான் முதல்வராக இருந்த போது பா.ஜ., அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்தவர்பழனிசாமி. மூன்று புதிய குற்றவியல் சட்டங்களையும் ஆதரித்து பா.ஜ., அரசுக்கு பக்கபலமாக இருந்துகூட்டணி தர்மத்தை காத்தவர், பழனிசாமி.இவரை முதல்வராகவே மத்திய அரசு மதிக்கவில்லை என்றுஸ்டாலின் சொல்வது வேடிக்கையாகவும் உள்ளது; நம்பக்கூடியதாகவும் இல்லை. கருணாநிதியின் புகழை 24 மணி நேரமும் சொல்லிக் கொண்டே இருக்க அவரது ரத்த வாரிசுகளும், அவரது விசுவாசிகளும் இருக்கின்றனர். ஆனால், எம்.ஜி.ஆரின் புகழை சொல்ல அவருக்கு வாரிசுகளும் இல்லை; உண்மையான விசுவாசிகளும் அ.தி.மு.க.,வில் இல்லை என்பது தான் உண்மை.சரி... அது போகட்டும்.சென்னை கிண்டியில் கலைஞர் நுாற்றாண்டு மருத்துவமனையை திறக்க ஜனாதிபதி திரவுபதி முர்முவை அழைத்தார், முதல்வர் ஸ்டாலின். ஜனாதிபதி தேதி கொடுப்பதற்கு காலதாமதம் ஆனது.உடனே சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், 'ஜனாதிபதிவருகைக்காக காத்திருக்கமுடியாது. மருத்துவமனையை முதல்வரே திறந்து வைப்பார்' என்று அறிவித்தார். அதனால், 'திறப்பு விழாவிற்கு ஜனாதிபதி வரமறுத்து விட்டார்' என்று சொல்வது நியாயமாக இருக்குமா? அதுபோலவே, 'எம்.ஜி.ஆர்., நாணயத்தை வெளியிடமத்திய அரசில்இருந்து வர மறுத்து விட்டனர்' என்று ஸ்டாலின் சொல்வதும் தவறு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

God yes Godyes
செப் 11, 2024 22:36

விஜய் ஜாதகம் விபரீத ராஜ யோகத்தை காட்டுகிறது.


God yes Godyes
செப் 11, 2024 22:28

வரும் எலக்ஷன்ல விஜய் எதிர் கட்சி வரிசையில் உட்கார்ந்து ...களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பார். ஓட்டு போடற கபோதிங்க பெக்கா பெக்கா.


God yes Godyes
செப் 11, 2024 22:22

கொட கிராப்பு கிறுக்கு பசங்க விஜய் கட்சிக்கு ஓட்டு போட ரெடியாயிட்டானுவ.


D.Ambujavalli
ஆக 28, 2024 17:07

கைக்காசு கோடிகளை ஆனவரை திண்றுவிட்டுப் பறந்துவிடும் காக்கைக்கு கூட்டம் போல இவர் ரசிகர்கள் கலைந்துவிடுவார்கள் கட்சிக்கு ஆயுசு பாக்யராஜ், ராஜேந்தர் வரிசையில் முடிந்துவிடும்


Ms Mahadevan Mahadevan
ஆக 28, 2024 11:03

விஜய் யே ஒரு ஊழல் பேர்வழி. இதில் அவர் எப்படி ஊழல் இல்லாத ஆட்சி தருவார்,? சும்மா பதவி சுகம் காண கட்சி ஆரம்பிக்கிறார்


புதிய வீடியோ