உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / சோற்றால் அடிக்கும் திட்டம்!

சோற்றால் அடிக்கும் திட்டம்!

எஸ்.இசக்கிமுத்து, நெல்லையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென் னையில் தொடர் போராட்டங்களை முன்னெ டுத்து வரும் துாய்மை பணியாளர்களிடையே நிலவும் அதிருப்தியை தவிர்க்கும் வகையில், அவர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்க, சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஆண்டுக்கு, 50 கோடி ரூபாய் என, மூன்றாண்டுக்கு, 150 கோடி ரூபாய்க்கான டெண்டரை மாநகராட்சி கோரியுள்ளது. மூன்று வேளை சோறு போடும் திட்டத்தால், தினந்தோறும், 17,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பயன் பெறுவராம். குப்பையை கையாளும் பணியை தனியாரிடம் ஒப்படைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தங்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்படுவதாகவும் கூறி சம்பளத்தை உயர்த்தவும், பணி நிரந்தரத்தை வலியுறுத்தியும் தான் அவர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனரே தவிர, 'சோறு போடுங்கள்' என்று போராடவில்லை . ஒரு திட்டத்தை டெண்டர் வாயிலாக செயல்படுத்தும்போது, ஒப்பந்தம் எடுத்தவர் கூடுதலாக லாபம் பார்க்க திட்ட மிடுவாரே தவிர, உணவு ருசியாக இருக்க வேண்டும் என்று கவலைப்பட மாட்டார். மேலும், துாய்மை பணியாளர்கள், காலை, பகல், இரவு என ஷிப்ட் முறைப்படி மாறி மாறி வேலை செய்கின்றனர். உதாரணத்திற்கு, காலை, இரவு ஷிப்ட் பணியில் இல்லாதவர்களுக்கு காலை டிபனையும், இரவு உணவையும் மும்பை டப்பா வாலாக்களை போன்ற ஆட்களை நியமித்து, அவர்களது வீடுகளுக்கு சென்னை மாநகராட்சியே வழங்குமோ? இதில், மூன்று வேளையும் சைவ உணவா அல்லது அசைவ உணவும் உண்டா என்பது குறித்து எதுவும் கூறவில்லை. ஏனெனில், சிறைக் கைதிகளுக்கே வாரத்தில் இரண்டு நாட்களுக்கு சிக்கன், மட்டன் என அசைவ உணவு கொடுக்கும்போது, துாய்மை பணியாளர்களுக்கும் கொடுப்பது தானே முறை! எளிய மக்களின் போராட்டத்தை முறியடிக்க, 'மூன்று வேளை இலவச உணவு' என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது போல், இனி, அரசு ஊழியர்கள் போராடினால், அவர்களுக்கும் இதுபோன்று சோற்றால் அடிக்கும் திட்டத்தை திராவிட மாடல் அரசு நடைமுறைப்படுத்துமா அல்லது அவர்களது கோரிக்கைகளை நிறை வேற்று மா?  கானல் நீரில் கப்பல் விட முடியுமா? எ ன்.ஏ.நாகசுந்தரம், குஞ் சன்விளை, கன்னியா குமரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசியலுக்கு அடி த்தளம் அமைக்க வே ண்டும் என்றால், மக்களின் மனம் எனும் நிலத்தில் ஆழமான அஸ்திவாரம் அமைக்க வேண்டும். அதற்கு, மக்களால் எளிதாக அணுக கூடியவராகவும், அவர்களின் அடிப்படை பிரச்னைகள் குறித்து புரிந்தவராக இருப்பது டன், அவர்களில் ஒருவராக இருந்தால் தான் வெற்றி பெற முடியும்; தொடர்ந்து அதை தக்க வைக்கவும் முடியும். அன்று, எம்.ஜி.ஆர்., தன் அரசியல் வாழ்க்கைக்கான அடித்தளத்தை சினிமாவில் இருந்தே ஆரம்பித்தார். எளிய மக்களுடன் நெருங்கி உறவாடி, அவர்களில் ஒருவராக தன்னைக் காட்டிக் கொண்டார். அத்துடன், உதவி என்று கேட்டு வந்த வர்களுக்கு எல்லாம் வாரி வழங்கினார். அதனாலேயே மக்களின் மனங்களை வென்று, இன்றும் நினைவு கூரப்படுகிறார். அதேநேரம், தன்னை அடுத்த எம்.ஜி.ஆராக நினைத்துக் கொண்டிருக்கும் நடிகர் விஜய், தன்னை சந்திக்க வருவோரை பார்க்கக் கூட விரும்பாதவர். சமீபத்தில் மதுரையில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில், விஜயை அன்புடன் தொட வந்த ரசிகர் ஒருவரை, பாதுகாப்பு வீரர்கள் துாக்கி வீசி எறிந்த போது, அதை கண்டு கொள்ளாமல் கடந்து சென்றவர் வி ஜய். இதையெல்லாம் விஜய் ரசிகர்கள் கண்டுகொள்ளாவிட்டாலும், வெற்றியை தீர்மானிக்கும் சக்திகளான நடுநிலை வாக்காளர்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். இரண்டு கட்சிக்கும் மாற்றாக ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும் எனில், இரு கட்சிகளிடம் இல்லாத சிறப்பு இருக்க வேண்டும். அது, விஜயின் த.வெ.க.,விடம் இருக்கிறதா? தமிழகத்தில் எத்தனையோ பிரச்னைகள் இருக்கின்றன. அதுகுறித்து விஜய் பேசியுள்ளாரா? ஆளுங்கட்சி அரசியலுக்காக கையில் எடுத்துள்ள நீட் தேர்வு ரத்து, கச்சத்தீவு மீட்பு போன்ற நடைமுறைக்கு சாத்தியமில்லாத விஷயங்களை விஜய் பேசுவதால் என்ன நன்மை ஏற்பட்டுவிடப் போகிறது? அதற்கு பதில், தி.மு.க., கொடுத்த தேர்தல் வாக்குறுதியான கல்விக் கடன் தள்ளுபடி குறித்தும், இன்னும் மக்களுக்கு பயனளிக்கும் விஷயங்கள் குறித்தும் பேசலாம். இலவசங்களை தவிர்த்து மக்கள் சுயமாக உழைத்து வாழ, தான் ஆட்சிக்கு வந்தால் செய்யப் போகும் நலத்திட்டங்கள் குறித் து பேசலாம். அது, மக்களிடம் சிறு நம்பிக்கையை ஏற்படுத்தும்; ஓட்டாக மாறவும் கூடும். ஆனால், இவற்றை எல்லாம் விடுத்து, சினிமா பிம்பத்திற்காக கூடும் கூட்டத்தைப் பார்த்து, கானல் நீரில் கப்பல் விட நினைக்கலாமா?  எதை முன்மாதிரியாக எடுக்க வேண்டும்? கே.மணிவண்ணன், கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'இன்றைய இளைஞர்கள் கருணாநிதியை முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்...' என்று கூறியுள்ளார், தி .மு.க., - எம்.பி., கனிமொழி. எந்தெந்த விஷயங்களில் கருணாநிதியை முன்மாதிரியா க எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் சேர்த்துக் கூறியிருக்கலாம். காரணம், முதல்வர் ஆக வேண்டும் என்பதற்காக, கருணாநிதி தன் பசப்பு வார்த்தைகளால் எம்.ஜி.ஆரை மயக்கி, அவரது ஆதரவைப் பெற்று முதல்வர் ஆனதும், கட்சியின் வரவு - செலவு கணக்கு கேட்டார் என்பதற்காக எம்.ஜி.ஆரை., கட்சியில் இருந்து துாக்கி அடித்தார். அவரது இந்த நன்றி விசுவாசத்தை இளைஞர்கள் முன்மாதிரி யாக எடுத்துக் கொள்ள வேண்டுமா? விஞ்ஞான ரீதியாக எப்படி ஊழல் செய்யலாம் என்பதற்கு உதாரண புருஷராக திகழ்ந்ததை, அரசு இயந்திரத்தை தன் குடும்ப உறுப்பினர்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொண்டதை, மத்திய அரசில் வளம் கொழிக்கும் பதவிகள் தங்கள் குடும்பத்தினருக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக, இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்ட போது, கடற்கரையில் அரை நாள் உண்ணா விரதம் இருந்ததை... தன் குடும்பத்தினர், கட்சியினர் மது ஆலைகள் வாயிலாக வளம் பெற, தமிழகத்தை மது மிகு மாநிலமாக மாற்றியதை... இவற்றில், எதை முன்மாதிரியாக இளைஞர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கனிமொழி கூறுவா ரா? 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை