என்.பாடலீஸ்வரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மத்தியில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி, உலக அளவில் பல துறைகளிலும், நம் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறார்.உள்நாட்டுக் கட்டமைப்பு, 'மேக் இன் இந்தியா' என, பல விதத்திலும் இந்தியாவைமுன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்கிறார்.தமிழகத்திலும், சில ஆண்டுகளுக்கு முன்புவரை, பத்தோடு பதினொன்றாக இருந்த பா.ஜ., தற்போது அதிவேக வளர்ச்சி கண்டு,மக்களின் மனதில் இடம் பிடித்து விட்டது.சமீப காலமாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தில் வட்டமடித்து வருவதாகவும், முதல்வர் பதவிக்கு அவரை முன்னிலைப்படுத்த பா.ஜ., முயல்வதாகவும் நம் நாளிதழில் செய்தி படித்தேன். நிர்மலா, நிர்வாகத்திறமை உடையவர்; தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஆனால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அவரை ஏற்றுக் கொள்வரா என்பது சந்தேகமே. நம் மாநிலத்தில், தேர்தலில் பதிவாகும் ஓட்டுகளில், 90 சதவீதம், ஏழை, நடுத்தர மக்களின் ஓட்டுகளே.வசதி படைத்தவர்கள் ஓட்டுச்சாவடிக்கு வந்து ஓட்டளிப்பது குறைவான சதவீதமே.ஏழை நடுத்தர மக்கள், இன்றைய விலைவாசி உயர்வால், கடும் திண்டாட்டத்துக்கு உள்ளாகி உள்ளனர் என்பது கண்கூடு. அரிசி முதல் பல அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கு, ஜி.எஸ்.டி., வரி போடப்பட்டுள்ளது. இனிப்பு, காரம், சமோசா போன்றவை, பால் சார்ந்த தயிர், நெய் போன்றவை, இட்லி, தோசை என, எதைப் பார்த்தாலும் வரி போட்டு தாளித்து எடுக்கிறார் நிர்மலா.ஏழை மக்கள் வாங்கும், 1 லட்ச ரூபாய்க்கும்குறைவான இருசக்கர வாகனத்திற்கு, கணிசமான அளவு ஜி.எஸ்.டி., விதித்துள்ளார். ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடு பிரீமியம்களுக்கு கூட, கணிசமான அளவு ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது.ஏற்கனவே பெட்ரோல், டீசல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வால் அவதிப்படும்ஏழை, நடுத்தர மக்களுக்கு, உணவுப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி., என்பது கூடுதல் சுமையே.நட்சத்திர ஹோட்டல்களில் சாப்பிடும்உணவுகளுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி.,யை,வசதி படைத்தவர்கள் ஒரு பொருட்டாகவே எண்ண மாட்டார்கள்; ஆடம்பர வாகனங்களுக்கான வரியையும் அவர்கள் பொருட்படுத்துவதில்லை. எனவே, சாதாரண ஏழை மக்களின் வலியையும், வேதனையும் உணரவில்லை என்றால், அவர்கள் யாராக இருந்தாலும், மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதை பா.ஜ., புரிந்து கொள்ள வேண்டும். வெளியுறவு கொள்கையில் மாற்றங்கள் தேவை! வெ .சீனிவாசன்,
திருச்சி யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மாலத் தீவுகள்,
இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நம்மைச் சுற்றி உள்ள அண்டை
நாடுகளுக்கு, நம் நாடு பல வழிகளிலும் உதவி வருகிறது. உதாரணத்திற்கு,
குறைந்த வட்டியில் நீண்டகால கடன், உள்கட்டமைப்பு களை உருவாக்கித் தருவது,
கொரோனா தடுப்பூசிகள் வழங்கியது, மருத்துவ சேவை, போன்றவற்றைச்
சொல்லலாம்.
மாலத்தீவு அரசு, சமீபகாலமாக இந்திய விரோதி
சீனாவின் பக்கம் சாய்ந்துள்ளது; அவர்களுக்கு உதவி செய்வதற்காக
அனுப்பப்பட்ட நம் ராணுவத்தினரையும் வெளியேற்றியுள்ளது; நம் மத்திய அரசை
அவமதிக்கும் விதமாகவும்பேசியுள்ளது.நமக்கு விரோதமான கொள்கைகளை முன்
நிறுத்தி ஆட்சிக்கு வந்த மாலத் தீவின்அதிபர், தற்போது, அடிக்கடி இங்கு
வருகிறார்;நம் நாட்டின் புகழ் பாடுகிறார். இது, நம்மை சமாதானப்படுத்துவது
போல் உள்ளது. இலங்கை, இந்தியாவைவிட்டு நகர்ந்து, சீனா ஆதரவுநிலைப்பாட்டை எடுத்தது;ராஜபக்சே, சீனாவுடன் கூடிக் குலாவினார்.இலங்கைத்
துறைமுகங்களுக்கு சீன ராணுவ கப்பல்கள், இந்தியாவின் பாதுகாப்புக்கு
அச்சுறுத்தலாக இருக்கும் விதத்தில், அடிக்கடி வந்து செல்கின்றன. சீனாவிடம்
வாங்கிய கடன் சுமையைத்தாங்க முடியாமல் தவிக்கிறது இலங்கை; இருந்த போதிலும்,
நம் நாடுஇலங்கைக்கு பல உதவிகளை தொடர்ந்து அளித்து வருகிறது.சமீபத்தில் ஆட்சியைப்பிடித்துள்ள புதிய அரசு கூட, இந்திய எதிர்ப்பு, சீன ஆதரவு அரசாக இருக்கக்கூடும் என்று செய்திகள் கூறுகின்றன.
ஆப்கானிஸ்தானுக்கும்,இந்தியாவிற்கும்சரித்திரபூர்வ தொடர்புண்டு. ஆனால்,
சிலஆண்டுகளாக, மத வெறியர்கள், பழமைவாதிகளின் ஆட்சியில் இருக்கும்
ஆப்கானிஸ்தானில், ஹிந்துக்கள், சீக்கியர்கள்துன்புறுத்தப்பட்டு, வெளியேற
வேண்டிய கட்டாயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.போதைப் பொருட்களும்
அங்கிருந்து இந்தியாவிற்கும் வருகின்றன. இந்திய விரோதியான பாகிஸ்தான்ஆதரவு
நிலைப்பாடு, ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவில் பயங்கரவாதத்தில்
ஈடுபடுவது போன்ற செயல்களில் அந்நாடு ஈடுபட்டு வருகிறது.
வங்கதேசத்திலிருந்து சட்ட விரோதமாக, பல்லாண்டுகளாக பல லட்சக்கணக்கானோர்,
நம் நாட்டில் குடியேறி உள்ளனர். ஹிந்துக்கள் பெரும்பான்மையினராக இருந்த பல
பகுதிகள்இன்று, வங்கதேசத்தவர்களின் வரவால், இஸ்லாமியர் பகுதிகளாக
மாறியுள்ளன; வட கிழக்குமாநிலங்களில், பல பிரச்னைகளுக்கு அடிப்படைக் காரணம்
இதுவே. அண்டை நாடுகளுஉடனான நம் உறவை மறு பரிசீலனை செய்து, காலத்திற்கேற்ற மாற்றங்களைக் கொண்டு வருவதே நல்லது என்று தோன்றுகிறது. மனப்பக் குவம் இல்லையே!
என்.வைகை
வளவன், மதுரையில் இருந்து அனுப்பிய'இ - மெயில்' கடிதம்:ஹரியானாவில் நடந்த
சட்டசபை தேர்தலில், மூன்றாவது முறையாக பா.ஜ., 'ஹாட்ரிக்' வெற்றி பெற்று
ஆட்சியை தக்க வைத்துள்ளது. சில செய்திநிறுவனங்கள், 'காங்., கட்சியே ஆட்சியை
பிடிக்கும்' என தெரிவித்த கருத்து கணிப்புகளை தவிடுபொடியாக்கி, பா.ஜ.,
வெற்றி பெற்றுள்ளது.வழக்கம் போல,'ஹரியானாவில் தேர்தல் முடிவுகள்
எதிர்பாராத வகையிலும், மக்களின் மனங்களுக்கு நேர்மாறாகவும் உள்ளதால்,
தேர்தல் முடிவை ஏற்க முடியாது' என்று கமென்ட் அடித்துஇருக்கிறார்,
காங்.,பிரமுகர் ஜெய்ராம் ரமேஷ்.பா.ஜ., அரசுக்கு எதிராகவிவசாயிகள்
நடத்திய போராட்டம், பிரதமர் மோடியின் செல்வாக்கை கொஞ்சம்கூட குறைக்கவில்லை
என்பதைத் தான் ஹரியானா தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி உள்ளன.தேர்தலில், ஆம் ஆத்மி அடைந்த படுதோல்வி, கெஜ்ரிவாலுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்பதை தெளிவுபடுத்திஉள்ளது. 'மக்கள்
தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்று நினைக்காமல், ஜெய்ராம் ரமேஷ் கமென்ட்
அடித்துஇருப்பது எந்த வகையிலும்நியாயமாகாது. காஷ்மீரில்நடந்த
சட்டசபைதேர்தலில் தோல்வி அடைந்தமெஹபூபா முப்தி,'மக்களின் தீர்ப்பை
ஏற்கிறேன்' என்கிறார்.அந்த மனப்பக்குவம், ஜெய்ராம் ரமேஷுக்கு
இல்லாதது, அவர் ஜனநாயகத்தையும்,தேர்தலையும் எந்த அளவுக்கு மதிக்கிறார்
என்பதை தெளிவாக காட்டுகிறது.