உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / பா.ஜ., வளர திறமையான தலைவர் வேண்டும்!

பா.ஜ., வளர திறமையான தலைவர் வேண்டும்!

பொ.ஜெயராஜ், பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரளாவில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: தமிழக பா.ஜ., தலைவராக அண்ணாமலை இருந்த போது, கட்சி உயிரோட்டத்துடன் இருந்தது. ஒவ்வொரு நாளும் கட்சி அடுத்தக் கட்ட வளர்ச்சியை நோக்கி முன்னேறியது. தமிழகமெங்கும் பா.ஜ., கொடி பறந்தது; தொண்டர்கள் உற்சாகமாக கட்சிப் பணியாற்றி க் கொண்டிருந்தனர். ஆனால், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி சொன்னார் என்பதற்காக, டில்லி மேலிடம் அண்ணாமலையை மாற்றி, நயினார் நாகேந்திரனை என்று தலைவராக நியமித்ததோ, அன்றிலிருந்தே, தமிழக பா.ஜ., வீழ்ச்சியை நோக்கி செல்ல ஆரம்பித்து விட்டது. அண்ணாமலை தலைவராக இருந்த போது, பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும்போதெல்லாம், அவருக்கான வரவேற்பு பிரமாண்டமாக இருக்கும். ஆனால், சமீபத்தில் பூந்தமல்லி- – வடபழனி மெட்ரோ ரயில் திட்டத்தை துவக்கி வைக்க, பிரதமர் சென்னை வந்தார். முதல்வர் விஜய், அவரை வரவேற்க விமான நிலையம் வந்தார். அவரை வரவேற்க கூடிய கூட்டத்தில், பா.ஜ.,வின் கொடிகளை விட, த.வெ.க., வின் கொடிகளே அதிகம் இருந்தன. தமிழகத்தில், பா.ஜ., வளர வேண்டும் என்றால், ஜாதி அடிப்படையில் தலைவரை நியமிக்காமல், அண்ணாமலை போன்ற திறமையான ஒருவரை தலைவராக நியமிக்க, அகில இந்திய தலைமை முன்வர வேண்டும்! lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Balan Palaniappan
அக் 17, 2026 17:53

தமிழ்நாட்டுக்கு எதிராக மோதி தற்போது கொண்டுள்ள நிலையை மாற்றி தமிழுக்கு தமிழ்நாட்டுக்கு உரிய உரிமைகளை வழங்கிட விடை பிஜேபி எந்த நாளிலும் தமிழ்நாட்டில் வளர முடியாது ஒவ்வொரு தமிழரும் பிஜேபி வர வேண்டாம் நாங்கள் பின் தள்ளப்பட்டாலும் பிஜேபி எங்களுக்கு வேண்டவே வேண்டாம் என்று தான் நினைக்கிறார்கள்


Lakshminarasimhan
அக் 17, 2026 10:42

மோஹன சுந்தரம் மண்டைல மசாலா இல்லை இது போன்ற அண்ணாமலைக்கு சொம்படிக்கும் கும்பலின் கடிதத்தை எல்லாம் பிரசுரிக்கணுமா. இந்த கருத்தை தினமலர் கட்டாயம் பிரசுரிக்கணும்


mohana sundaram
அக் 17, 2026 04:57

மண்டையில் மசாலா உள்ளவர்கள் சிந்திக்க முடியும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை