வாசகர்கள் கருத்துகள் ( 2 )
என்ன, புற வாசல். வழியாக. தொடர்ந்த. உறவு வெளிப்படையாகக். கைகோர்த்துக் கொள்கிறது இது. புரியாத. அளவு. வெள்ளந்தியா. தினகரன். /
தவெகவுக்கு மட்டும் முட்டு கொடுக்க நினைக்குது
ச.ஜான் பிரிட்டோ, சென்னையில் இருந்து அனுப்பிய, ‘இ- – மெயில்’ கடிதம்: ‘தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் எப்படி இணைந்து செயல்பட முடியும்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார், அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சி பொதுச்செயலர் தினகரன். தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதை மறந்து, தி.மு.க.,வின் கொள்கைகளில் எதையும் பின்பற்றாமல், அ.தி.மு.க., தன் அரசியல் பயணத்தை தொடர்வது போல் கூறியுள்ளார், தினகரன். மது விற்பனையில் இருந்து, ‘பார்ட்டி பண்ட்’ வசூலிப்பது வரை, இரு கட்சிகளும் இணை கோடுகள் தானே? அதிலும், லஞ்சம், ஊழல், கனிமவள கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து செய்வது என இரு கட்சிகளுக்கும் இடையில் என்ன வேறுபாடு உள்ளது? முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்த வரை, தி.மு.க.,வினரை நிமிர்ந்து பார்க்கவே பயப்பட்ட அ.தி.மு.க.,வினர், இப்போது, ‘என் பிரண்டைப் போல யாரு மச்சான்’ என்று பாட்டு பாடாத குறையாக, பரஸ்பரம் கட்டியணைத்தும், கட்சி வேட்டியை மாற்றிக் கட்டியும் பாசப் பயிர் வளர்ப்பதை, தமிழக மக்கள் பார்த்துக் கொண்டு தானே இருக்கின்றனர். அதுமட்டுமல்ல... நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராக, இரு கட்சிகளும் பங்காளி உறவு கொண்டு, கூட்டணிக்கு அச்சாரம் இட்டவர்கள் தானே... அவர்களால் இணைந்து செயல்பட முடியாதா? தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் எதிரிகள் போல் வேடம் போட்டாலும், இருவரது கொள்கைகளும் ஒன்று தான் என்பது தினகரனுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்; மக்களுக்குமா தெரியாது! lll
என்ன, புற வாசல். வழியாக. தொடர்ந்த. உறவு வெளிப்படையாகக். கைகோர்த்துக் கொள்கிறது இது. புரியாத. அளவு. வெள்ளந்தியா. தினகரன். /
தவெகவுக்கு மட்டும் முட்டு கொடுக்க நினைக்குது