ப.ராஜேந்திரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'வரும் சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகளில் வெற்றி நிச்சயம்; இதை, நானும் இறுமாப்போடு சொல்லிக் கொள்கிறேன்' என்று கூறிஉள்ளார், தி.மு.க., -- எம்.பி., கனிமொழி. இறுமாப்பு என்பது உங்கள் ரத்தத்தில் ஊறியதாயிற்றே! வீட்டு வரி, தண்ணீர் வரி, பத்திரப் பதிவு வரி, மின் கட்டண உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு என, மக்கள்விழி பிதுங்கிக் கொண்டிருக்கையில், வரும்தேர்தலில், வாக்காளர்கள் போகப் போவது,தனி வழி என்பதை உணராமல் பேசிஉள்ளார், கனிமொழி. மஹாராஷ்டிராவில், பார்லிமென்ட் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி, பல தொகுதிகளில் வெற்றி பெற்றது; ஆனால், சட்டசபைத் தேர்தலில் காணாமல் போய் விட்டது. அது போன்ற ஒரு நிலையைத்தான்,தமிழகமும் வரும் சட்டசபைத் தேர்தலில் சந்திக்க இருக்கிறது.கடந்த பார்லிமென்ட் தேர்தலில், அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் தனித்துப் போட்டியிட்டன. தி.மு.க., மட்டுமே காங்., - வி.சி., போன்ற கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிட்டது.தனித்து நின்றிருந்தால், தி.மு.க., எத்தனைதொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்? ஜெயலலிதா உதிரிக் கட்சிகளை எல்லாம்ஓரம் கட்டி விட்டு, தனித்து நின்று வெற்றிவாகை சூடினாரே... அதுபோல், தி.மு.க.,வால்வெற்றி பெற முடியுமா?கூட்டணி எனும் குதிரை மேல் சவாரி செய்தபடி, இவ்வளவு இறுமாப்பு கூடாது!வரும், 2026 தேர்தலில், அ.தி.மு.க.,வுடன்,த.வெ.க., கூட்டணி வைத்து போட்டியிடலாம்.பா.ஜ.,வின் ஓட்டுகள் குறைய வாய்ப்பில்லைஎன்பதால், த.வெ.க., வுக்கு போகும்ஓட்டுகள், தி.மு.க., விலிருந்து பிரிந்து சென்ற ஓட்டுகளாகவே இருக்கும். மகளிரின் ஓட்டுகளை கவர, தி.மு.க., மகளிர் உரிமைத் தொகையை, 1,000 ரூபாயில்இருந்து, 2,000 ரூபாயாக அதிகரிக்கலாம். எதிர்க்கட்சிகளும், தங்கள் பங்குக்கு, உரிமைத் தொகையை கண்டபடி உயர்த்தலாம்.இது தான் நடக்குமே தவிர, தி.மு.க., தங்கள் ஆட்சிக் காலத்தில் செய்திருக்கும் சாதனைகள் என்று எதை எடுத்துச் சென்று போய் ஓட்டுக் கேட்பர்?மக்கள் சூடு கண்ட பூனையாக உள்ளனர்;ரொம்ப இறுமாப்பு வேண்டாம்! இலவசங்களால் யாருக்கு நன்மை?
யாபேத்
தாசன், பேய்க்குளம்,துாத்துக்குடி மாவட்டத்தில்இருந்து எழுதுகிறார்:
தமிழகத்தில், தேர்தல் வாக்குறுதியாக, 1967ல் தி.மு.க.,வினரால், ஒரு
ரூபாய்க்கு, 3 படி அரிசி என்றுசொல்லப்பட்டது. இதுதான்,வாக்காளர்களை
கவர்வதற்காக அறிவிக்கப்பட்ட, முதல்ஜனரஞ்சக வாக்குறுதி. பின்,அது, '3 படி
லட்சியம்; ஒரு படி நிச்சயம்' என்று குறுக்கப்பட்டது.அன்று, ஒரு
மாநிலத்தில்,ஒரு கட்சியினரால் சொல்லப்பட்டது; இன்று
அனைத்துகட்சியினராலும், அனேகமாகஎல்லா மாநிலங்களிலும் இலவசங்கள்
அறிவிக்கப்பட்டு, பெருவாரியான மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. சுதந்திரம்
பெற்று, 78 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களால்,
வறுமை ஒழியவில்லையா;வறுமை ஒழியவில்லை என்பதால் தான், அரசியல்கட்சிகளை இலவச
திட்டங்களை அறிவிக்க துாண்டுகிறதா... ஏழைகள் தான் இலவசம்கோரி போராடுகின்றனரா அல்லது இலவசம் வழங்குவதால் வறுமை தான் ஒழிந்து விடுமா... இத்தகைய கேள்விகள்எல்லாம் நிச்சயம் எழும்.கடந்த,
1991ல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கை,'அரசு, நிதி
நெருக்கடிக்குள்சிக்கக் கூடாது' என்று கூறியது. அரசின் நிதி
பற்றாக்குறைக்கு வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. அப்போது, ஆட்சி
பொறுப்புக்கு வந்த அனைத்துஅரசுகளுமே, இலவசங்களைஅறிவிக்காமல், அரசின்
வருவாயை பெருக்குவதில்தான், கவனம் செலுத்தின.அதாவது, மத்திய -
மாநிலஅரசுகள் பட்ஜெட் பற்றாக்குறையை குறைப்பதற்கானமுயற்சியில் இறங்கின. ஆனால், இன்றோ எல்லாமே தலைகீழ்!இலவச
வாக்குறுதிகளைஅள்ளி விட்டு, வெற்றி பெறஅனைத்து கட்சிகளுமே முயலுகின்றன.
ஏனெனில்,அரசியல் கட்சிகளின் இலக்கு,ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது!ஒரு
காலத்தில், குஜராத்தில் இலவச மின்சாரம் என்று காங்கிரஸ்வாக்குறுதி
அளித்தபோது,'இலவச மின்சாரம் வேண்டுமா அல்லது தடையில்லாத
மின்சாரம்வேண்டுமா' என்று கேட்டு,வெற்றி பெற்றது பா.ஜ., என்பது வரலாறு.ஆனால், இப்படிப்பட்டகொள்கை ரீதியிலான நிலைப்பாடு, இன்று தமிழகத்தில் எந்த ஒரு கட்சியிடமும் இல்லை என்பது மிகவும் வருந்தத்தக்கது. தேர்தல்
ஆணையம், 'கட்சிகள், இலவச திட்டங்களை அறிவிக்கும்போது, அதற்கான நிதி எப்படி
திரட்டப்படுகிறது என்பதையும் அறிவிக்க வேண்டும்'என்று கூறியது; அதை, எந்த
கட்சியும் கண்டுகொண்டதாக தெரியவில்லை.வளர்ச்சி திட்டங்களில்கவனம்
செலுத்தி, வேலைவாய்ப்பை அதிகரித்தால் மட்டும் தான், வறுமை குறையும். இலவச
அறிவிப்புகள் அரசியல் கட்சிகளுக்கு வேண்டுமானால், நன்மை பயக்கலாம்; ஆனால்,
வறுமையை ஒருநாளும் ஒழிக்காது. இதை அரசியல் கட்சிகள் புரிந்து கொண்டால் நாட்டிற்கு நல்லது! நீதிமன்றம் ஆணை இடுமா?
எஸ்.செபஸ்டின்,
சிவகாசி,விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
தமிழகத்தில்எங்கெல்லாம் மழை அதிகமாக பெய்கிறதோ, அங்கெல்லாம், வீடுகள்
நீரில் மூழ்கி விடுகின்றன.இதனால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு,
கையேந்தும் நிலைக்குதள்ளப்படுகின்றனர். மீண்டும் அவர்கள் பழைய
நிலையை அடைய, பல ஆண்டுகள் ஆவதும், அதற்குள், மற்றொரு புயல் வந்து, அவர்கள்
வாழ்வை பழைய நிலைக்கே தள்ளுவதும் தான், நிதர்சனமாக உள்ளது. இதற்கெல்லாம்காரணம், தமிழகத்தை ஆண்ட, ஆண்டு வரும் இரு திராவிட அரசுகள் தான்!தனிநபர்கள்
நீர்நிலைகளைஆக்கிரமித்து வீடு கட்டும்போது, உள்ளூர்
ஆளும்கட்சிநிர்வாகிகள், கமிஷனை வாங்கிக் கொண்டு கண்டு கொள்ளாமல் இருப்பது,
கூடவே, வட்டம், குட்டம் என்று கட்சி அடிபொடிகளின்ஆக்கிரமிப்பு என, இன்று
தமிழகத்தில் உள்ள அனைத்துநீர்நிலைகளும் ஆக்கிரமிப்பிற்குள் அகப்பட்டுள்ளன. இது
போதாதென்று, அரசும் தன் பங்கிற்கு, காவல்நிலையம், நீதிமன்றம், சமுதாய
கூடம், பொது கழிப்பறை என்று நீர்நிலைகளை ஆக்கிரமித்து,
ஆக்கிரமிப்பாளர்களின் செயல்களுக்கு பச்சைக் கொடி காட்டுகிறது!நிலைமை இப்படி இருக்க, மழை வந்தால், வெள்ளநீர் வடிய வழியில்லாமல், குடியிருப்புகளை சூழ்வது இயற்கை தானே!வருங்காலத்தில்,
இது போன்ற வெள்ளப் பாதிப்புகளால் மக்கள் அவதிப்படாமல்இருக்க, நீதிமன்றம்
தான், ஆக்கிரமிப்பாளர்கள் மீதுஅதிரடி நடவடிக்கை எடுக்கவேணடும்.அரசியல்வாதிகளோ,
அதிகாரிகளோ இதைக் கண்டுகொள்ள மாட்டார்கள். ஏனென்றால், ஆக்கிரமிப்பு
நடக்கும்போதும், இவர்களுக்குவருமானம் வரும்; வெள்ளத்தால்
பாதிக்கப்பட்டமக்களுக்கு உதவும் போதும்வருமானம் வரும்.மக்களின்
சாவிலும் வருமானம் ஈட்டும் சில அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இருக்கும்
வரை, மக்களின் துயரங்கள் தீராது. நீதிமன்றங்களால் மட்டுமே மக்களைக்
காப்பாற்ற முடியும்.அதனால், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை தயவு தாட்சண்யமின்றி அகற்றுவதற்கு நீதிமன்றங்கள் ஆணை இடவேண்டும்!