உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / வாய்ப்பூட்டு அவசியம்!

வாய்ப்பூட்டு அவசியம்!

கே,மணிவண்ணன், நடுப்பாளையம், கோவை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜிவ், ஆற்றில் பெருக்கெடுத்து வரும் நுரைக்கு சாயக்கழிவுகள் காரணமல்ல; வீடுகளில் பயன்படுத்தும் சோப்பு, ஷாம்பு தான் காரணம் என்று கூறியுள்ளார். மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமாரோ, துணை ஜனாதிபதி பங்கேற்ற நிகழ்ச்சியில் ஏற்பட்ட மின் தடைக்கு காரணம், 'ஜெனரேட்டரில் டீசல் தீர்ந்தது தான்' என்கிறார். முதலில், மின்வெட்டுக்கு காரணம் ஒரு சில அதிகாரிகள் என்றவர், இப்போது ஜெனரேட்டரில் டீசல் இல்லை என்கிறார். பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனோ, 'மைக்' கிடைத்தால் போதும்; வாய்க்கு வந்ததை எல்லாம் பேசுகிறார். எதிர்க்கட்சிகள் கண்களில் விளக்கெண்ணெயை ஊற்றி, இந்த ஆட்சியின் செயல்பாடுகளை பார்த்து கொண்டிருக்கின்றனர் என்பதையே மறந்து, மனம் போனபடி அமைச்சர்கள் பேசுவது ஆட்சிக்கு நல்லதல்ல. இவர்களுக்கு வாய்பூட்டு போடவில்லை எனில், முதல்வரை இந்த அமைச்சர்கள், முட்டு சந்தில் நிறுத்திவிடுவர்!நெஞ்சு வலி டிராமா போதும்!கே.ரங்கராஜன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தி.மு.க., முன்னாள் அமைச்சர் துரைமுருகன் இல்லத் திருமணத்தில், பார்ப்பனர்களின் சமஸ்கிருத மந்திர ஒலி கேட்டு, இதயம் வலிக்கிறது' என்று கூறியுள்ளார், திராவிட இயக்கப் பேரவைத் தலைவர் சுப. வீரபாண்டியன்.துரைமுருகன் வீட்டு திருமணத்தில் ஹிந்து மந்திரங்கள் ஓதினால், வீரபாண்டியனுக்கு நெஞ்சு வலிக்கிறது; அதே, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மனைவி, கோவில் கோவிலாக செல்லும் போது, மகிழ்ச்சியில் நெஞ்சு குளிர்கிறது போலும்! 'திருப்பதி கோவில் உண்டியலுக்கு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் எதுக்கு?' என்று கேள்வி எழுப்பிய கனிமொழி, திருப்பதி சென்று சுவாமி தரிசனம் செய்தாரே... அப்போது, வீரபாண்டியனின் இதயம் ஏன் வலிக்க வில்லை?ஒரு கிறிஸ்துவ இல்லத் திருமண விழாவில், பாதிரியார்களின் நுனிநாக்கு ஜெபத்தின் போதும், இஸ்லாமியர் வீட்டு திருமணத்தில் உருது மொழி மந்திரத்தின் போதும் வலிக்காத இதயம், ஹிந்து முறைப்படி திருமணம் நடந்தால் மட்டும் வலிப்பது ஏன்?முன்னாள் அமைச்சர் நேரு மீது அமலாக்கத் துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தவுடன், அடித்துப் பிடித்து நேரு சென்ற இடம் கோபாலபுரமோ, பெரியார் திடலுக்கோ அல்ல; திருப்பதிக்குத் தான் சென்றார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியே, தன் மனைவியுடன் ரகசியமாக, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு போன வரலாறு உண்டு எனும் போது, அவரது சீடர்களும் அந்த வழியை தானே பின்பற்றுவர்? அதனால், நெஞ்சு வலி, வயிறு வலி, 'டிராமா' வேண்டாம்!முதல்வரின் முகவரி பிரிவுக்கு பாராட்டுகள்!பி.ஸ்ரீதர், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக அரசின், 'முதல்வரின் முகவரி' குறைதீர்க்கும் திட்டம், பொதுமக்களுக்கு மிகுந்த பயனளிக்கும் வகையில், சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. மின்சார வாரியம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் ஆகிய துறைகள் தொடர்பாக, நான் அளித்த புகார்கள் அனைத்திற்கும் திருப்திகரமான தீர்வு கிடைத்துள்ளது. குறிப்பாக, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் கிட்டத்தட்ட, 10 ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் நிலுவையில் இருந்த பிரச்னைகள், முதல்வரின் முகவரி வாயிலாக அளித்த புகாரின்படி, 20 நாட்களுக்குள் தீர்க்கப்பட்ட போது, பெரும் வியப்பாக இருந்தது. மற்ற துறைகள் தொடர்பான புகார்களுக்கும் பொதுவாக, 30 நாட்களுக்குள் தீர்வு கிடைத்து விடுகிறது. இதன் சிறப்பு என்னவென்றால், புகார்களைப் பதிவு செய்வதோடு நின்றுவிடாமல், அவற்றுக்குத் தீர்வு கிடைப்பதையும் உறுதி செய்யும் வகையில் இத்திட்டம் செயல்படுகிறது என்பதே என் நேரடி அனுபவம்!மேலும், அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று அலையாமல், பொதுமக்கள் தங்களது குறைகளை முதல்வரின் முகவரி செயலி வாயிலாக, அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லலாம். இத்தகைய பயனுள்ள திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தி வரும் தமிழக அரசுக்கும், முதல்வரின் முகவரி பிரிவுக்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் மனமார்ந்த பாராட்டுகள்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை