உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / விழிப்புடன் இருங்கள்!

விழிப்புடன் இருங்கள்!

பி.எஸ்.ரங்கஸ்வாமி, சென்னையில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: ஓட்டு திருட்டு என்றும், வாக்காளர் பட்டியல் சீர்திருத்தத்தில் முறைகேடு என்றும், கரப்பான்பூச்சி கட்சியினர் போராட்டம் நடத்துவது போல், 2024ல், தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில், அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ இரண்டாவது முறை வெற்றி பெற்றதும், அவரை எதிர்த்து, இதுபோன்று ஒரு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஒட்டுமொத்த உலகத்தையும் தனக்கு சொந்தமானதாக நினைத்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா தான் இதன் சூத்திரதாரி! ‘நியூயார்க் டைம்ஸ், ப்ளூம்பெர்க், தி கார்டியன்’ போன்ற அமெரிக்க பத்திரிகைகள், ‘வெனிசுலாவில் நடந்த தேர்தல் மோசடியானது; ஜனநாயகம் ஆபத்தில் இருக்கிறது; நிக்கோலஸ் மதுரோவின் தலைமையில், ஒரு சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது’ என்று பொய் செய்திகளை பரப்பி, அங்கு ஒரு போராட்டத்தை கட்டமைத்தன. அமெரிக்கா விரும்பியது போன்றே, அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அந்நாட்டின் விருப்பத்திற்கேற்ப செயல்படும் ஓர் அரசும் அங்கு அமைந்தது. இதேபோன்று தான், இலங்கையிலும், நேபாளத்திலும் கருத்துருவாக்கம் செய்யப்பட்டு, ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஏன்... கடந்த ஆண்டு வங்கதேசத்தில், அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவை சர்வாதிகாரியாக சித்தரித்து பிரசாரம் செய்யப்பட்டது. விளைவு... போராட்டமும், பின் ஆட்சி மாற்றமும் நிகழ்ந்தது. நாடுகள் வெவ்வேறாக இருந்தாலும், போராட்ட சூழ்நிலைகள் மட்டும், ஒரே மாதிரியாக இருப்பது எப்படி? தெற்காசிய நாடுகளில் தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட துடிக்கும் அமெரிக்காவின் குள்ளநரி தந்திரம் இது! இதேபோன்று தான், இந்தியாவில் தனக்கு கீழ்ப்படிந்து செயல்படும் நபர்களை ஆட்சியில் அமர்த்த நினைக்கிறது, அமெரிக்கா. அதனால் தான், ‘ஆப்பரேஷன் சிந்துார்’ குறித்து கேள்விக் கணைகள் தொடுக்கப்பட்டதும், இந்திய பொருளாதாரம் செத்து விட்டதாக பிரசாரம் செய்யப்பட்டதும், ‘மோடி ஒரு சர்வாதிகாரி; ஓட்டு திருடர்’ என்று கூறுவதும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ‘ஹேக்’ செய்யப்பட்டதாக தற்போது எழுந்துள்ள குற்றச்சாட்டுகளும்! அதுமட்டுமல்ல... இந்தியாவில் தாங்கள் வளர்த்து வரும் நபர்களால், தங்களுடைய திட்டத்தை செயல்படுத்த முடியாதபோது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பே நேரடியாகக் களத்தில் இறங்கி, வரி விதிப்பு விளையாட்டை தொடங்கினார். அவரது ஒரே நோக்கம், எப்படியாவது நம் நாட்டின் ஒட்டுமொத்த சந்தையையும் கைப்பற்றி விட வேண்டும் என்பதே! ‘ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்காதீர்கள்!’ என்பது வெளிப்படையான கோரிக்கையாக இருந்தாலும், ரஷ்யாவுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக்கொள்ள வேண்டும் என்பதே அமெரிக்கா, இந்தியாவிற்கு கொடுத்த அழுத்தம். இவ்வளவு அழுத்தங்களுக்கும் பிரதமர் மோடி செவி சாய்க்கவில்லை; தன் உறுதியான நிலைப்பாட்டிலிருந்தும் பின் வாங்கவில்லை. அதற்கு காரணம், கோடிக்கணக்கான தேசபக்தி மிக்க குடிமக்கள், அவர் பின் இருக்கும் தைரியம் தான்! நாம், நம் நாட்டின் பக்கம் நிற்பதால், மோடி, தன் முடிவுகளில் இருந்து பின்வாங்குவதில்லை! எனவே, ஒவ்வொருவரும், வெனிசுலாவில் என்ன நடந்தது என்பதையும், இந்தியாவில் தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் கவனத்தில் கொண்டு, இன்னும் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பிரதமர் மோடியை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்காக, எதிர்க்கட்சிகள் இன்னும் கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடக்கூடும். நாம் உறுதியாக, பிரதமர் மோடியின் பின் இருந்தால், அமெரிக்காவின் குள்ளநரி தந்திரம் பலிக்காது!

lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

மோகனசுந்தரம்
அக் 19, 2026 05:19

நாம் எப்பொழுதும் நம் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு பெரும் ஆதரவு கொடுப்போம். அண்ணாமலை அவர்களின் ஆதரவாளராக இருந்தாலும் பிரதம மந்திரி மோடியை உயர்த்துவது நம் நாட்டிற்கு மிக மிக நல்லது. மக்கள் இதனை உணர்ந்து செயல்படுவது மிக மிக நன்று.