உள்ளூர் செய்திகள்

இதே நாளில் அன்று

ஆகஸ்ட் 9, 1993 திரிபுரா மாநிலம், அகர்தலாவில், பளு துாக்கும் வீரர் துலால் கர்மாகர் - கவுரி தம்பதியின் மகளாக, 1993, இதே நாளில் பிறந்தவர் தீபா கர்மாகர். வறுமையான குடும்பத்தில் பிறந்த இவரை, விளையாட்டு வீராங்கனையாக்க தந்தை முயன்றார். அதற்காக,6 வயதில், சோமநந்தி, பிஸ்வேஷ்வர் நந்தி ஆகியோரிடம் ஜிம்னாஸ்டிக் பயிற்சிக்கு அனுப்பினார்.இவரது தட்டையான பாதம் பயிற்சிக்கு தடையாக இருந்ததால், தினமும் பல மணி நேரம் முயன்று பாதத்தை வளைத்தார். தரை, வால்ட், பேலன்ஸ், பீம், சீரற்ற பார்கள் எனும் ஜிம்னாஸ்டிக் பிரிவுகளில், மாநிலத்தின் சார்பில் பங்கேற்றார். 2008ல், ஜூனியர் தேசிய சாம்பியன் ஆனார்.தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் 70க்கும் மேற்பட்ட தங்கப்பதக்கங்கள் வென்றார். பதக்கங்களால் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த இவருக்கு, நாட்டின் உயரிய விளையாட்டு விருதுகளான, 'அர்ஜுனா, கேல் ரத்னா, துரோணாச்சார்யா' மட்டுமின்றி, பத்மஸ்ரீயும் பெற்றுள்ளார். இவரது 31வது பிறந்த தினம் இன்று.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை