ஜூலை 27, 1963 கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில், வானொலி பாடகர் கிருஷ்ணன் நாயர் - வீணை வித்தகி சாந்தகுமாரி தம்பதியின் மகளாக, 1963ல் இதே நாளில் பிறந்தவர் சித்ரா.இவர், தன் 13வது வயதில், சிக்கலான ராகங்களை நிரவல் செய்து, மத்திய அரசின் உதவித்தொகையுடன், இசைப் பிரிவில் பட்டம் பெற்றார். பேராசிரியர் ஓமண்ண குட்டியிடம் இசை கற்றார். பள்ளி இறுதி வகுப்பு மாணவியாக, கே.ஜே.ஜேசுதாசுடன் இணைந்து மேடைகளில் பாடினார்.இசையமைப்பாளர் ரவீந்திரன், இவரை சென்னைக்கு அழைத்து வந்தார். நீதானா அந்தக்குயில்' படத்தில், 'பூஜைக்கேத்த பூவிது, கண்ணான கண்ணா' என்ற பாடல்களை, இசையமைப்பாளர் இளையராஜா இவருக்கு வழங்கினார்.தொடர்ந்து, 'துள்ளி எழுந்தது பாட்டு, ஒரு ஜீவன் அழைத்தது' உள்ளிட்ட பாடல்களை பாடி, புகழ் பெற்றார். சிந்து பைரவி படத்தின் 'நானொரு சிந்து' பாடலுக்காக தேசிய விருது பெற்றார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 25,000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி, 'பத்ம ஸ்ரீ' உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார். 'சின்னக்குயில்' சித்ராவின் 61வது பிறந்த தினம் இன்று!