| ADDED : ஆக 06, 2024 10:15 PM
ஆகஸ்ட் 7, 1703 துாத்துக்குடி மாவட்டம், நாகலாபுரத்தில் நறுமண பொருள் வணிகம் செய்த, செய்கு முகம்மது அலியாரின் மகனாக, 1642 அக்டோபர் 23ல் பிறந்தவர் உமறு புலவர். இவர், எட்டயபுரம் மன்னர் வெங்கடேஸ்வர எட்டப்ப பூபதியின் அவை புலவராக விளங்கிய, கடிகைமுத்து புலவரிடம் தமிழ்க் கற்று புலவரானார். தன் ஆசானுக்கு பின், எட்டயபுர மன்னரின் அவை புலவராக பொறுப்பேற்றார். சதக்கத்துல்லா, மஹ்மூது தீபி ஆகியோரிடம் இஸ்லாமிய கல்வி கற்றார். வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளுக்கு இணங்கி, முகமது நபியின் வாழ்க்கை வரலாற்றை, 'சீறாப்புராணம்' எனும் தமிழ் காப்பியமாக இயற்ற துவங்கினார். அதற்கு முன் சீதக்காதி இறந்ததால், பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த செல்வந்தர் அபுல் காசீம், அதை எழுத ஆதரவளித்தார்.மேலும், 'முதுமொழி மாலை, சீதக்காதி கோவை' உள்ளிட்ட பல நுால்களையும் எழுதியுள்ள இவர், 1703ல் தன் 61வது வயதில் இதே நாளில்மறைந்தார். எட்டயபுரத்தில் உள்ள இவரது மணி மண்டபத்தில், அக்டோபர் 23ம் தேதி, மாவட்ட அளவில் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இவரது நினைவு தினம் இன்று!