இதே நாளில் அன்று
செப்டம்பர் 17, 1950குஜராத் மாநிலம், வாத் நகரில், தாமோதர் தாஸ் முல்சந்த் மோடி- - ஹீராபென் தம்பதியின் மகனாக, 1950ல் இதே நாளில் பிறந்தவர் நரேந்திர தாமோதர் தாஸ் மோடி. இவர் தன், 8வது வயதில் ஆர்.எஸ்.எஸ்.,சில் சேர்ந்து பயிற்சி பெற்றார். டில்லி, குஜராத் பல்கலைகளில் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றார். பா.ஜ.,வில் சேர்ந்து தீவிரமாக பணியாற்றினார். குஜராத் முதல்வர் கேசுபாய் படேல், 2001ல் பதவி விலகியதால், அக்டோபர் 7ல் முதல்வரானார்.தொடர்ந்து நான்கு முறை தேர்லில் வென்று முதல்வராக நீடித்த இவர், 2014 லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, வாரணாசி, வடோதரா தொகுதிகளில் வெற்றி பெற்றார்; 2014, மே 26ல் பிதமராக பதவியேற்றார்.தொடர்ந்து, 2019, 2024ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி பெற்று, பிரதமராக தொடர்கிறார். 'முத்தலாக்' ஒழிப்பு, சட்டப்பிரிவு 370 ரத்து, பார்லிமென்ட் புதிய கட்டடம் உள்ளிட்ட சாதனைகளால், வலிமையான பிரதமராக திகழ்கிறார். உலக அரங்கிலும் பல்வேறு தலைவர்களால் பாராட்டப்படுபவரது, 74வது பிறந்த தினம் இன்று!