மேலும் செய்திகள்
காரைக்கேணியில் படுகளத் திருவிழா
03-Mar-2025
மார்ச் 7, 1832 கடந்த 1777, செப்., 24ல், மராட்டிய போன்ஸ்லே அரச குடும்பத்தில் பிறந்தவர் இரண்டாம் சரபோஜி. தஞ்சையின் மராட்டிய மன்னர் துல்ஜாஜி, இவரை தத்தெடுத்தார். துல்ஜாஜி இறந்தபோது, சரபோஜி சிறுவனாக இருந்ததால், அவரின் ஒன்றுவிட்ட சகோதரர் அமர்சிங் மன்னரானார். 1787 முதல் 1798 வரை தஞ்சையை ஆண்ட அமர்சிங், பிரிட்டிஷாரை எதிர்த்தார்.இதனால், ஸ்வார்ட்ஸ் பாதிரியாரிடம் வளர்ந்த சரபோஜியை, பிரிட்டிஷார் 1798ல் மன்னராக்கினர். ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, உருது, சமஸ்கிருதம், பிரெஞ்சு, ஜெர்மன், டேனிஷ், கிரேக்கம், லத்தீன், டச்சு மொழிகளை கற்றறிந்த சரபோஜி, ஆயிரக்கணக்கான ஓலைச்சுவடிகள், நுால்களை சேகரித்து, சரஸ்வதி மஹால் நுாலகத்திற்கு வழங்கினார். கல்வி, கலைகளை வளர்த்தார்; அச்சகம் துவக்கினார்; தினசரி தர்பார் நிகழ்வுகளை பதிவு செய்தார்; கோவில்களுக்கு நன்கொடை அளித்தார்.தஞ்சாவூர் முதல் ராமேஸ்வரம் வரை பக்தர்கள் தங்கி, உணவருந்தி, உறங்கி செல்லும் வகையில் பல சத்திரங்களை கட்டினார். இவர், தன் 54வது வயதில், 1832ல் இதே நாளில் காலமானார்.தஞ்சை மராட்டியர்களின் கடைசி சுதந்திர மன்னர் மறைந்த தினம் இன்று!
03-Mar-2025