உள்ளூர் செய்திகள்

இதே நாளில் அன்று

மார்ச் 13, 1936வேலுார் மாவட்டம், காவேரிப்பாக்கத்தில், ராமசாமி முதலியார் - அகிலாண்டவல்லி தம்பதியின் மகனாக, 1876, பிப்ரவரி 20ல் பிறந்தவர் நமச்சிவாயம் முதலியார். இவர், தன் தந்தை நடத்திய திண்ணை பள்ளியில் ஆரம்ப கல்வி கற்றார். 'நல்வழி, நன்னெறி, நீதிநெறி விளக்கம், விவேக சிந்தாமணி' உள்ளிட்ட நுால்களை கற்று தேர்ந்தார். தன் 16வது வயதில் பள்ளி ஆசிரியராகி, சென்னையில் பல பள்ளிகளில் பணியாற்றினார். ஆங்கில அறிஞர்கள் பாடநுால்களை எழுதிய காலத்தில், எஸ்.எஸ்.எல்.சி., இன்டர்மீடியட், பி.ஏ., உள்ளிட்ட வகுப்புகளுக்கான பாடநுால்களை இவரே எழுதினார். இதை விரும்பாத பிரிட்டிஷ் அதிகாரி, இவரை பணியில் இருந்து நீக்கினார். மாணவர்கள் போராட்டத்தால் மீண்டும் பணியமர்த்தப்பட்டார்.நிறைய நாடகங்கள் எழுதியுள்ளார். 'திருவிளையாடல் புராணம், நன்னுால் கண்டிகை' உள்ளிட்ட நுால்களுக்கு உரை எழுதிய இவர், தன், 60வது வயதில், 1936ல் இதே நாளில் மறைந்தார்.இவரது நினைவு தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை