உள்ளூர் செய்திகள்

இதே நாளில் அன்று

செப்டம்பர் 28, 1974உத்தரபிரதேச மாநிலம், திக்ரியில்,1974ல் இதே நாளில் பிறந்தவர் சுனில்குமார் வர்மா. இவர், திக்ரி அரசு பள்ளி, ஜி.பி.பந்த் வேளாண்மை தொழில்நுட்ப பல்கலையில் ஆராய்ச்சி படிப்பு வரை முடித்தார். கைரேகை மற்றும் டி.என்.ஏ., உள்ளிட்டவற்றை கண்டறியும் ஆய்வுகளை செய்தார்.புற்றுநோயியல் துறையில் ஆய்வு செய்து டி.பில்., முடித்தார். சி.சி.எம்.பி.,யில் முதன்மை விஞ்ஞானியாக பணியாற்றிய இவர், 'ஆர்ட்டெமிசியா அன்னுவா' எனும் தாவரத்தில் இருந்து பிரித்த மூலப்பொருள், மலேரியா மருந்தாக இருப்பதை கண்டறிந்தார்.அதை மேம்படுத்திய சீன விஞ்ஞானி யூயூவுக்குலாஸ்கர் விருது கிடைத்தது. டி.என்.ஏ., பார்கோடிங்முறையான, 'யுனிவர்சல் பிரைமர்' தொழில்நுட்பம் சார்ந்த ஆய்வுகளில் ஈடுபட்டார்.தடய அறிவியல் சார்ந்த பல்வேறு பிரச்னைகளுக்கும், சுற்றுச்சூழல், வன பாதுகாப்புக்கானதீர்வுகளை தன் ஆய்வுகளின் வாயிலாக வெளிப்படுத்தி பல விருதுகளை பெற்ற இவர், கொரோனா தொற்றால், தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதில், 2021, மே 31ல் தன் 47வது வயதில் மறைந்தார்.மூலக்கூறு அறிவியல் விஞ்ஞானி வர்மா பிறந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !