இதே நாளில் அன்று
அக்டோபர் 23, 1908புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டையில், வேலாயுதம் - விசாலாட்சி தம்பதியின் மகனாக, 1908ல் இதே நாளில் பிறந்தவர் சிவம்.இவர், திண்ணை பள்ளியில் துவக்க கல்வியையும், உயர்நிலைப் பள்ளியில் பிரெஞ்சும், தமிழும்கற்றார். பாரதிதாசனின் நண்பராகி, அவரிடம் தமிழ் யாப்பிலக்கணம் கற்று, கவிதைகள் எழுதினார். தனியார் பள்ளியில் ஆசிரியராகவும், பாரதிதாசனின், 'புதுவை முரசு' இதழின் பதிப்பாசிரி யராகவும் பணியாற்றினார்.ஈ.வெ.ரா.,வின் கொள்கைகளை இவ்விதழின் வழியே பரப்பியதால், மூன்று மாத சிறை தண்டனைபெற்றார். பின் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால்அவ்விதழை நிறுத்தினார். பாரதிதாசனை ஆசிரியராகவைத்து, 'ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம்' எனும் கவிதை இதழை ஓராண்டு நடத்தினார்.இவர், 'வீரத்தாய், கோகிலராணி, வீரநந்தன், மறக்குடி மகளிர், காதலும் கற்பும்' உள்ளிட்ட நுால்களை எழுதினார். இவரின் கவிதைகள் மற்றும்நாடகங்களை, புதுவை அரசு கலை, பண்பாட்டு துறை தொகுத்து, நுாலாக வெளியிட்டுள்ளது.தமிழக அரசின், 'பாரதிதாசன் விருது' பெற்ற இவர், 1989, ஆகஸ்ட் 31ல் தன் 81வது வயதில் மறைந்தார். புதுவை சிவம் பிறந்த தினம் இன்று!