இதே நாளில் அன்று
நவம்பர் 7, 1954-ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில்,வழக்கறிஞரான சீனிவாசன் அய்யங்கார்- ராஜலட்சுமி தம்பதியின் மகனாக, 1954ல் இதே நாளில் பிறந்தவர் கமல்ஹாசன்.குழந்தைகளின் படிப்புக்காக சென்னைக்கு குடிபெயர்ந்த சீனிவாசன்,இவரை சாந்தோம் பள்ளியில் சேர்த்தார். ஏ.வி.மெய்யப்ப செட்டியாரின் மனைவிக்கு சிகிச்சை அளிக்க சென்ற டாக்டர் ஒருவர், இவரை உடன் அழைத்துச் செல்ல, ஏ.வி.எம்.சரவணன்இவரை, களத்துார் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்தார்; அதில், ஜனாதிபதிவிருது பெற்றார் கமல்ஹாசன்.பின், நடன உதவி இயக்குனராக இருந்த கமல்,கன்னியாகுமரி என்ற மலையாள படத்தில் நாயகன்ஆனார். தமிழில், அரங்கேற்றம் படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து, அபூர்வ ராகங்கள்,மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன், தசாவதாரம் உள்ளிட்டதமிழ் படங்களுடன், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, வங்க மொழி படங்களிலும் நடித்துள்ளார்.'பத்மஸ்ரீ, பத்ம பூஷன்' உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ள இவர், 'மக்கள் நீதி மய்யம்'கட்சியின் தலைவராகவும் செயல்படுகிறார். கமல்ஹாசனின், 71வது பிறந்த தினம் இன்று!