உள்ளூர் செய்திகள்

இதே நாளில் அன்று

நவம்பர் 10, 1965கோவையில், அரசு பள்ளி ஆசிரியர்களான சுப்பிரமணியன் - கண்ணம்மாள் தம்பதியின் மகளாக, 1965ல் இதே நாளில் பிறந்தவர் தாமரை.இவர், கோவையில் பல்வேறு பள்ளிகளிலும், அரசு பொறியியல் கல்லுாரியிலும் படித்தார். ஐந்தாம் வகுப்பு படித்தபோது, 'தையல்காரி கண்ணம்மா' என்ற சிறுகதை எழுதி பிரபலமானார். தொடர்ந்து, விகடன் மாணவர் நிருபராகி, தன் எழுத்தை செம்மையாக்கினார்.கோவையில் தனியார் நிறுவனத்தில்,இன்ஜினியராக ஆறாண்டுகள் பணி செய்தார். 'ஏர் இந்தியா' நடத்திய சிறுகதை போட்டியில் வெற்றி பெற்று வெளிநாடு சென்றார்.இனியவளே படத்தில், 'தென்றல் எந்தன் நடையை கேட்டது' பாடலை எழுதி, சினிமா பாடலாசிரியரானார். தொடர்ந்து, 'மல்லிகைப்பூவே மல்லிகைப்பூவே பார்த்தாயா, வசீகரா என் நெஞ்சினிக்க, அழகிய அசுரா, ஒன்றா ரெண்டா, உயிரின் உயிரே, பார்த்த முதல் நாளே, கண்ணான கண்ணே' உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி, பல விருதுகளை பெற்றுள்ளார். 'மொழிக்கலப்பு, இரட்டை அர்த்தம் கலக்காத பாடல்களை மட்டுமே எழுதுவேன்' எனும்கொள்கையுடன் வாழும் கவிதாயினியின் 59வது பிறந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Minimole P C
நவ 14, 2024 08:51

All are OK.


Ramesh S
நவ 11, 2024 06:46

கவிஅரசி தாமரை அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்


Mohan
நவ 10, 2024 17:46

எந்த வண்ணமும் பூசிக்கொள்ளாத, தமிழ்ப்பற்று மட்டுமே தன் தன் அடையாளமாகக் கொண்ட கவிதாயினி தாமரை மேலும் மேலும் தமிழுக்கு சேவையாற்ற வேண்டுமென இறைவனை வேண்டிக் கொள்கிறேன். கலப்பற்ற கவிதைகளின் கதாசிரியை வாழ்க


புதிய வீடியோ