உள்ளூர் செய்திகள்

இதே நாளில் அன்று

நவம்பர் 17, 1870தஞ்சை மாவட்டம் ஹரித்துவாரமங்கலத்தில், வாசுதேவ ரகுநாத ராஜாளியார் - ஆயி அம்மாள் தம்பதியின் மகனாக, 1870ல் இதே நாளில் பிறந்தவர்கோபாலசாமி ரகுநாத ராஜாளியார்.தஞ்சையில், 300 ஏக்கர் நிலக்கிழாரானஇவர், பச்சைக்கோட்டை விஞ்சிராயரிடம் குருகுல கல்வி, கும்பகோணம், தஞ்சையில் மேற்படிப்புகளை முடித்தார். ஆங்கிலம், சமஸ்கிருத மொழிகளை அறிந்த இவர், தன் வீட்டில் நுாலகத்தை உருவாக்கி, அரிய சுவடிகள், நுால்களை சேகரித்தார்.இவரிடம் தான், புறநானுாறு சுவடிகளை வாங்கி உ.வே.சா., பதிப்பித்தார். சித்த மருத்துவரான இவர், இலவச மருத்துவசாலையை திறந்தார். பல பள்ளி, கோவில்களை கட்டி, நிலதானம் செய்தார். ஐந்தாம் ஜார்ஜ் மன்னர்,ராணி மேரி ஆகியோரால் விருந்தளித்து கவுரவிக்கப்பட்டார்.தஞ்சையில் கரந்தை தமிழ்ச்சங்கம், மதுரையில் புலவர் கல்லுாரி, சென்னை பல்கலையில் தமிழ் துறையை துவக்கிய இவர், 1920 ஜூன் 6ல் தன் 50வது வயதில் மறைந்தார்.இவரது பிறந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை