உள்ளூர் செய்திகள்

இதே நாளில் அன்று

நவம்பர் 24, 1961மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரஜிப் ராய் - கேரளாவை சேர்ந்த மேரி தம்பதியின் மகளாக, மேகாலயாவில் உள்ள ஷில்லாங்கில், 1961ல் இதே நாளில் பிறந்தவர் சுசானா அருந்ததி ராய்.இவர், கேரளாவின் கோட்டயம், தமிழகத்தின் ஊட்டி பள்ளிகளில் படித்தார். டில்லியில் கட்டட கலை படிப்பை முடித்து, டில்லி நகர்ப்புற வளர்ச்சி நிறுவனத்தில் பணியாற்றினார்.மாஸ்ஸி சாஹிப் என்ற படத்தில் ஆடு மேய்ப்பவராக நடித்தார். இவர் எழுதிய, 'காட் ஆப் ஸ்மால் திங்க்ஸ்' நாவல், உலகின் சிறந்த நுாலுக்கான, 'புக்கர்' பரிசை பெற்றது.'வீ ஆர் ஒன்; எ செலிபிரேஷன் ஆப் ட்ரைபல் பீப்பிள்ஸ்' எனும் நுாலை எழுதி, அதன் ராயல்டியை பழங்குடியின அமைப்பிற்கு வழங்கினார். இலங்கையில், வதை முகாம்களில் தமிழர்கள் அடைக்கப்பட்டது உள்ளிட்ட சர்வதேச போர் குற்றங்கள் பற்றி நிறைய எழுதினார். ஆங்கில இலக்கியத்துக்காக இவருக்கு அறிவிக்கப்பட்ட, 'சாகித்ய அகாடமி' விருதை நிராகரித்தார்.இவரது, 63வது பிறந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை