உள்ளூர் செய்திகள்

இதே நாளில் அன்று

நவம்பர் 28, 1927

கோவையில், எச்.எம்.ஹண்டே - மகாலட்சுமி தம்பதிக்கு மகனாக, 1927ல் இதே நாளில் பிறந்தவர், எச்.வெங்கட்ரமண ஹண்டே எனும் எச்.வி.ஹண்டே. இவரது மூதாதையர்,கர்நாடக மாநிலம், மங்களூரைச் சேர்ந்தவர்கள்.டாக்டரான இவரது தந்தை, இவரையும் டாக்டருக்கு படிக்க வைத்தார். 'வெள்ளையனே வெளியேறு' சுதந்திரப் போராட்டத்தில் கல்லுாரி மாணவராக பங்கேற்றார். சென்னை ஷெனாய் நகரில், மருத்துவமனை அமைத்து சேவை செய்தார்.ராஜாஜி அழைத்ததால், சுதந்திரா கட்சியில் சேர்ந்து, 1967, 1971 சட்டசபை தேர்தல்களில், சென்னை, பூங்கா நகர் தொகுதி எம்.எல்.ஏ., ஆனார். 1973ல் எம்.ஜி.ஆர்., அழைத்ததால், அ.தி.மு.க.,வில் இணைந்தார். எம்.ஜி.ஆர்., அரசில்1980 மற்றும் 1984ம் ஆண்டுகளில் சுகாதாரத் துறை அமைச்சரானார்.இவர், ராஜாஜியின் வரலாறு, அம்பேத்கர் சட்ட வரைவை உருவாக்கியது குறித்த நுால்களை எழுதியுள்ளார். கம்ப ராமாயணத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, கம்பனின் கவிச்சுவையை உலகம் அறிய தந்துள்ளார். தற்போது, பா.ஜ., ஆலோசனைக் குழுவில் உள்ளார்.இவரது 98வது பிறந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !