உள்ளூர் செய்திகள்

இதே நாளில் அன்று

டிசம்பர் 2, 1960ஆந்திர மாநிலம், ஏலுாரு மாவட்டம், கொவ்வாலியில், ராமல்லு - சரசம்மா தம்பதியின் மகளாக, 1960ல், இதே நாளில் பிறந்தவர் விஜயலட்சுமி எனும், நடிகை, 'சில்க்' ஸ்மிதா.நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், வறுமையால், இளமையிலேயே திருமணம் செய்விக்கப்பட்டார். மண வாழ்க்கை தோல்வியடைய, நடிகை அபர்ணாவுக்கு, மேக் - அப் பெண்ணாக சென்னை வந்தார். இவரை, 'சில்க் ஸ்மிதா' என்ற பெயரில், வண்டிச்சக்கரம் என்ற படத்தில், சாராயம் விற்பவராக நடிக்க வைத்தார் வினு சக்கரவர்த்தி. அவரின் மனைவி, சில்க் ஸ்மிதாவுக்கு ஆங்கிலமும், நடனமும் கற்பித்தார். அந்த படத்தின், 'வா மச்சான் வா...' என்ற கவர்ச்சிப்பாடல், இவருக்கு ரசிகர் பட்டாளத்தை ஈட்டியது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, தன் கிறக்கமான கண்கள், கொஞ்சும் பேச்சு, அபார நடனத்தால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழி படங்களில் நடித்தார். பெரிய நடிகர்களும், தங்கள் படங்களில், இவரின் பாடலை விரும்பினர். அலைகள் ஓய்வதில்லை, கோழி கூவுது, மூன்றாம் பிறை, நீங்கள் கேட்டவை, தாலாட்டு கேட்குதம்மா உள்ளிட்ட படங்களில், குணச்சித்திர நடிகையாகவும் வெற்றி பெற்ற இவர், தன், 36வது வயதில், 1996, செப்டம்பர் 23ல், சென்னையில், தன் வீட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.'காந்த கண்ணழகி' பிறந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ