உள்ளூர் செய்திகள்

இதே நாளில் அன்று

டிசம்பர் 21, 1948ஈ.வெ.ரா.,வின் அண்ணன் கிருஷ்ணசாமியின் மகனான ஈ.வெ.கி.சம்பத் - சுலோசனா தம்பதியின்மகனாக, 1948ல் இதே நாளில், ஈரோட்டில் பிறந்தவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.இவர், ஈரோடு கலைமகள் கல்வி நிலையத்தில் பள்ளி படிப்பையும், சிக்கய்ய நாயக்கர் கல்லுாரி, சென்னை மாநில கல்லுாரிகளில் பட்ட படிப்புகளையும் முடித்தார். தன் தந்தையின் மறைவுக்கு பின், அவரின் நண்பரான நடிகர் சிவாஜி கணேசனின் அறிமுகத்தால், காங்கிரசில் 1977ல் சேர்ந்தார்; 1984ல், சத்தியமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ., ஆனார்.கடந்த 1989 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வின்ஜானகி அணியுடன் இணைந்து, சிவாஜி கட்சி சார்பில் போட்டியிட்டு தோற்றார்; பின், காங்கிரசில்இணைந்தார்.கடந்த 1996 -- 2002 மற்றும் 2014 -- 2017களில் தமிழக காங்., தலைவராக பொறுப்பு வகித்தார். இதற்கிடையே, 2009ல், கோபிச்செட்டிப்பாளையம்எம்.பி.,யாகி, மத்திய ஜவுளி துறை இணைஅமைச்சர் ஆனார். தன் மகனும், ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ.,வுமான திருமகன் இறந்ததால், 2023ல் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.,ஆன இவர், உடல்நலக் குறைவால், 2024 டிசம்பர் 14ல் தன் 76வது வயதில் காலமானார்.இவரது பிறந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ