உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதே நாளில் அன்று / இதே நாளில் அன்று: அக். 9

இதே நாளில் அன்று: அக். 9

அக்டோபர் 9: மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில், அரசவை இசைக் கலைஞர் ஹாபிஸ் அலி கானின் மகனாக, 1945-ல் இதே நாளில் பிறந்தவர், மாசூம் அலி கான் எனும் உஸ்தாத் அம்ஜத் அலி கான். இவர், டில்லி மாடர்ன் ஸ்கூலில் படித்தார். ‘சரோட்’ இசைக்கருவியை உருவாக்கிய செனியா கரானா இசை பரம்பரையின் ஆறாம் தலைமுறையைச் சேர்ந்த இவரும், தந்தையிடமே சரோட் இசைக்க பயிற்சி பெற்றார். மிகவும் வேகமான, ‘ஏகாரா தான்’ பாணி வாசிப்பில் வல்லவரானார். ‘ஹரிபிரியா கானடா, கிரண்ரஞ்சனி, லலிதத்வனி, பிரியதர்ஷினி, சிவாஞ்சலி’ உள்ளிட்ட பல புதிய ராகங்களை இயற்றியவர், தன் பெற்றோரின் நினைவாக, ‘ஹாபிஸ் கவுன்ஸ், ராஹத் கவுன்ஸ்’ எனும் ராகங்களையும் உருவாக்கினார். அமெரிக்காவின் ஹூஸ்டன், நாஷ்வில், துல்சா நகரங்களின் கவுரவ குடிமகனாக அறிவிக்கப்பட்டார். குவாலியரில் உள்ள இவரது இல்லம், ‘சரோட் கர்’ என்ற இசை அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. கடந்த 2014-ல் நோபல் அமைதி பரிசு கச்சேரி உள்ளிட்ட சர்வதேச கச்சேரிகளை நடத்திய இவருக்கு, ‘பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண், சங்கீத நாடக அகாடமி’ உள்ளிட்ட விருதுகளை மத்திய அரசு வழங்கி கவுரவித்தது. இவரது 81-வது பிறந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !